இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

துஷி கம்பி மேலதானா?
நான் ரீ ஊத்திக்கொண்டு வந்தனான், பழகிப்போச்சு குடிக்காட்டில் நித்திரை வராது. எங்களுக்கு 2 ஆண்பிள்ளைகள். உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களோ/ புதிதாகத் திருமணமானவரோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு கம்பி மேல என்ற வார்த்தையை பார்த்தாலே.. பறவைகள் நியாபகம் தான் வருது...

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ துஷி.

எப்படி இருக்கீங்கோ?என்ன இது உங்கலைத்தான் ஆளையே கானோம்.நான் தினமும் அருசுவைக்கு வந்து ஒரு பதிவாவது கொடுக்கிரேன்.உங்களையும் அப்படியே தேடுவேன்.உங்களுக்கு ஏதேனும் உடல்ந்லை சரியில்லையோ என நினைத்தேன்.உங்களுக்கு மெயில் அனுப்பினேன் அதர்கும் பதில் இல்லையா ஒரே வருத்தம்.அதுசரி இத்தனை நாள் நீங்கள் வராமல் என்னை யாரேனும் பார்த்திர்ர்களா என ஒரு கேள்வி.
இப்போ உடல்நிலை எப்படி இருக்கு.

ஹய்!
நான் நல்லா இருக்கிறன். நீங்கள் எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்? நிறைய புதுத் தோழிகள் அறுசுவைக்கு வந்திருக்கிறீங்கள். வேனி, தனிய இருக்கிறதை நினைச்சு கவலைப்படாதேயுங்கோ. இங்க வந்து கதையுங்கோ.உங்களுக்கு குழ்ந்தை கிடைச்சதும் நேரம் போவதே தெரியாது.

சுரேயினி!
கேட்டதுக்கு தாங்ஸ்.எனக்கு இப்ப உடம்புக்கு பிரச்சனை இல்லை. எனக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது(Atrial Septal Defect). அதனால் வலப்பக்க இதய அறை பெரிசாகி விட்டது. பெரிசாகினால் heart pump பண்ணும் சக்தி குறைந்து விடுமாம். அதனால் அடைக்க வேணும் என்று சொன்னார்கள். இந்த மாசம் 4ஆம் திகதி தான் போய் சேர்யரி (open heart surgery இல்லை) செய்தேன். மூன்று ஓட்டையில் 2 அடைச்சாச்சு. இன்னும் ஒன்று இருக்கு. 2 மாசத்தால போய் check பண்ணினால் தான் தெரியும். இரண்டு கிழமை வேலைக்கும் போக முடியாது. வீட்ட தான். ஜாலி....

ஜீவி இதைக்கேட்க எனக்கு தலைசுற்றுகிறது.வாசித்துவிட்டு கொஞ்ச நேரம் தலையை கையால் அழுத்திக்கொண்டே இருந்த்தேன்.பயப்பிட வேணாம் உங்களுக்காக நான் மனமுருகி மன்றாடுகிறேன்.
என்னை உங்கள் சொந்த அக்காவா நினைத்துக்கொள்ளுங்கோ.

எனது மூத்த சகோதரிக்கும் இப்படி இருந்து சரிசெய்தார்கள் என்று வீட்டில் சொல்வார்கள்.

யார் உங்களைக்கவனிக்கிறார்கள்?சர்ஜரி செய்து 1வீக்தானே நல்லா ஓய்வெடுங்கோ.நிறைய பழமெல்லாம் சாப்பிடுங்கோ எனேர்ஜி கிடைக்கும்.

அதிரா பிள்ளைகளின் ஹோம்வேர்க்கை நீங்களே செய்வது சரியான குற்றம்.

அதிரா நானும் இந்துதான்.

ஆனால் நமக்கு எம் மதமும் சம்மதம் தெரியுமோ.

கிறீஸ்தவப்பாடசாலையில் படித்ததால் அவ்ர்களைப்போலவே செபம் எல்லாம் செய்வேன்.என் கணவரும் என்னைப்போலதான்.வீட்டில் 2 கடவுள்களையும் வைத்து வணங்குகிறோம்.
நானும் உங்களைப்போல் விரதமெல்லாம் பிடிப்பேன்.12 வருடங்களாக சிவராத்ரி பிடிக்கிறேன்.

கந்தசஷ்டிகவசம் கண்ணமூடிக்கொண்டு சொல்லுவன் தெரியுமோ.அது என் அம்மாவின் விருப்பமான விரதம்.

எனக்கு அப்பா அம்மா கிடையாது இவை எல்லாத்துக்கும் மேலான தெய்வம் என் சகோதரி.அவவுடன் பாரீஸில் இருக்கும்போது நீங்கள் சொன்னதுபோல்கிறிஸ்மஸ் செய்வோம்.அக்காவின் பிள்ளைகள் படுக்கப்போகாமல் மரத்துக்கு முன்னாலயே முழிஞ்சுகொண்டு இருப்பினம்.பெரிய கஸ்ரப்பட்டு நித்திரையாக்கிவிட்டுத்தான் கிவ்ட் ஒளிச்சு வைப்போம்.இப்போ எனக்கு இங்கே கணவரைத்தவிர யாருமில்லை.

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு போடப்பட்டிருக்கும் எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டு வருகிறேன்.
தாரணி இங்கு வர வழி தெரியாமல் தேடுகிறா. கெதியா வந்து சேருவா. வரவேற்கத் தயாராக இருங்க.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் அதிரா,
பூனை, நாய் பற்றிக் கதைத்தது நான்தான். நீங்கள் என்ன சொல்லப் போறீங்களெண்டு ஆவலோட பாத்துக்கொண்டிருக்கிறன்.
நர்மதா, தையல் நல்லா இருக்குது. மகள் எப்பிடி இருக்கிறா? நான் டொபி பேப்பர் சேர்ப்போர் சங்கம் என்று ஒன்று ஆரம்பிக்க இருக்கிறேன். :-)
வாணி, ஸ்கூலால வந்ததும் கொஞ்ச நேரம் தான் எனக்குக் கொம்பியூட்டர் கிடைக்கும். இப்பவும் கியூவில் ஆட்கள் வந்து கரச்சலாக் கிடக்குது.
மன்னிக்கவும். மீதி நாளை தொடரும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் சுரேஜினி, உங்கட பதிவப் பாத்தபிறகுதான் கிறிஸ்மஸ்பற்றி நினைக்கிறேன். இன்னும் காட்ஸ் செய்யவே ஆரம்பிக்கவில்லை.
## நமக்கு வரும் துன்பத்தில் பாதிக்கு மேல் நாமே கற்பனை செய்து கொண்டவைகளே## :-)நான் அதை ஆமோதிக்கிறேன்.
அம்முலு, நானும் ஒருமுறை நல்லூர்த் திருவிழா போயிருக்கிறேன். எனக்கும் தும்பு முட்டாஸ் பிடிக்கும். போன கிழமை மகன் வாங்கிக் கொண்டுவந்து தந்தார். அது பஞ்சு மாதிரி (தும்பு இல்லை) இருக்கிறது.
துஷ்யந்தி, வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எப்பிடி இருக்கிறீங்க?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்