இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

ஹாய் அதிரா நான் திருமணம் ஆகி 6 வருடங்கள் இப்ப தான்ப்பா 2 மாதம் கர்பமா இருக்ரேன்.உங்கள் குழந்தைகள் பின்னால ஒடவே உங்கலுக்கு நேரம் சரியா இருக்கும்

அன்புடன்
துஷி

ஹாய் தனு நான் நல்லா இருக்ரேன்.நீங்கள் எப்படி இருகிங்கள்? நானும் ஒவ்வொரு நாளும் வருவேன் ஆனால் உங்களை காண்பதில்லை.உங்களுக்கு மெயில் வருதில்லை தனு ஏன்னு தெரியல.நான் அனுப்பினா அது எனக்கே திரும்ப வ்ருது டா.

அன்புடன்
துஷி

ஹாய் துஷி நான் நேற்றும் இன்றும் உங்கமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினேன்.ஏன்னு தெரியலை.ஆனால் நான் அதில் எல்லா மெயிலும் எனக்கு வருகிரஹெ.ஏன் உங்க மெயில் மட்டும் வரனு தெரியல.

ஹாய் ஜீவி,வணக்கம்.தங்களின் பதிவைப் பார்த்தேன். தங்கள் உடல் நிலை விரைவில் குணமாக எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் உண்டுபா.
தங்களின் பதிவுகளை பார்த்து உங்களின் சியர்ஃபுல்லான மனோநிலையை அறிந்துகொண்டேன்.ரியல்லி ஐ அப்பிரிஷியேட் யூ ஃபிரெண்ட்.வரும் இரண்டு மாதந்களும் நன்றாக ரெஸ்ட் எடுக்கவும்.கம்ஃபோர்ட்டபிளாக உட்கார்ந்து கொண்டு அறுசுவைக்கு மட்டும் வந்திருங்க!!!!!.மற்றொரு அறுவை சிகிச்சையும் நல்ல படியாக நடந்தேற இறைவன் அருள் புரிவார்..(கிழமை எனில் மாதம் தானே)

இலங்கை தோழிகளின் குதூகலமான அரட்டைகளை ரசித்து படிப்பேன்.தோழிகளே கலக்குங்கிறீங்கபா!!!என்ஜாய் நண்பிகளே.
A CHEERFUL HEART DOES GOOD LIKE MEDICINE.

சுரேயினி அக்கா!
உங்கள் பதிவு எனக்கு ஆறுதலாக இருந்தது. உங்களை அக்காவா நினைக்கச் சொன்னதும் சந்தோசமா இருந்திச்சு. அவர் தான் என்னை பார்க்கிறார். கடையிலும் சாப்பாடு வாங்குவோம். நீங்கள் சொன்னபடி பழங்கள் சாப்பிடுறன். பசி எடுப்பது குறைவு. எனக்காக மன்றாடுவதற்கு நன்றி...

அருன்பாலா!
இது தான் உங்களுடன் முதல் தடவையா கதைக்கிறன் என்று நினைக்கிறன். உங்கள் ஆறுதலான பதிவுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. அடிக்கடி அறுசுவைக்கு வந்து புதுப் பதிவு ஏதும் இருக்கோ என்று பார்ப்பது தான் இப்ப என்ர வேலை. கிழமை என்றால் வாரம்/week.

ஓஓ... என் அருமைத்தங்கச்சி ஜீவி உங்கள நிறைய நினைத்தேன் தும்முதோ தெரியவில்லை.தடிமன் வந்தாலே நான் பெரிய கஸ்ரப்படுவன் தெரியுமோ.என் ட்ராமாவைப்பார்த்து என்கணவர் வியந்து பாராட்டியது என்ன தெரியுமோ -உன்னைப்போல் ஒருவருமே தடிமனை இப்படி [லீவ் எடுத்து]கொண்டாட முடியாது- என்று.
நீங்கள் சர்ஜரி செய்திருக்கிறீங்கள் எழும்பி நடக்காமல்
கவனமா இருங்கோ.
3கிழமைதானா ஓவ்f காணுமா? எனது அக்காவை 3 மாதங்கள் படுக்கையில் வைத்துப்பார்த்ததாக என் அம்மா புலம்புவதெல்லாம் இப்போதான் யாபகம் வருது. ஆனால் அது இலங்கையில் அங்கு டாக்டர்களே கட்டாய ஓய்வெடுக்கும்படி சொல்வார்கள்.
இங்கெல்லாம் எதையும் பெருசு பண்ணமாட்டார்கள்.அவசர உலகம் இது.

படுத்திருந்து டிவி பாருங்கோ.முகம் தெரியாத எங்களின் மன்றாட்டுக்களே உங்களை பாதி சுகப்படுத்திவிடும் பருங்களேன்.

நீங்கள் உடம்பை கவனிக்க வேண்டும்.நல்லா ரெஸ்ட் எடுங்கோ. நானூம் உங்களை மாதிரி தான்(கவனிக்கவும், சுரேயினி போல் இல்லை) எதற்கும் கவலை பட மாட்டேன். இருமல், தடிமல் என்று ஒரு நாளும் படுக்க மாட்டேன்.
vany

அன்பின் அனைவருக்கும், நலமா? என்னால் அடிக்கடி வர ஏலாது. பார்க்க முடியும் கலந்து கொள்றது கொஞ்சம் கஸ்டம். :)
இமா நீங்கள் Tea bag folding, Iris folding பற்றி கேட்டிருந்தீர்கள். எப்பவோ பார்த்திட்டன். போனதடவை வந்த போது மறந்திட்டன். அது அழகான டிஸைனர் காகிதங்கள் வைத்து மடித்து அடுக்கி விதவிதமா கார்ட், ஹங்கிங் எண்டு செய்யலாம். நனும் ஒரு கார்ட் செய்து அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். பிரசுரமாகும் பொது பார்க்கவும். உங்களுக்கு தேவை எனில் சில வெப் சைட் லின்க் அனுப்புகிறேன். அல்லது நீங்களே கூகிள் பண்ணி பார்க்கலாம்.
ஜீவி நல்லா ரெஸ்ட் எடுங்கோ. விரைவில் குணமாக நானும் வேண்டுகிறேன்.
அனைத்து புது வரவுகளுக்கும் ஒரு ஹாய்!
-நர்மதா :)

வணக்கம் எல்லோருக்கும்!!
நலமா? நானும் உங்களுடன் உரையாடுவதற்கு வந்துள்ளேன். என்னையும் உங்கள் நண்பியாக ஏற்றுக் கொள்வீர்களா? நான் பிறந்து வளர்ந்த இடம் மல்லாவி. (1980-1993). சுரேஜினி என்ற சகோதரி மல்லாவில் வசித்ததாக உரையாடி இருக்கிறா. 1993 இல் கனடாவுக்கு வந்து விட்டேன்.

நன்றி

**அன்புடன் தாரணி**

மேலும் சில பதிவுகள்