இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

வாங்கோ தாரணி.உங்கள பற்றி சொல்லுங்கோ.மல்லாவி உங்கள் சொந்த இடமா.கேக்கவே சந்தோசமா இருக்கு.95,96 நான் அங்கு வசித்தேன் அதன்பின் வெளிநாடு வந்து விட்டேன்.அந்த யாபகங்களை என்னால் மறக்கவே முடியாது.மல்லாவில் நாங்கள் இருந்தது யோகபுரம்.மல்லாவி கொஸ்பிடல் ஸ்கூல் எல்லாம் இருக்குத்தானே அந்த ஒழுங்கைக்குள்தான் இருந்தோம்.உங்களுக்கு நான் சொல்லும் இடம் விளங்குதோ எண்டு சொல்லுங்கோ.மிச்சம் சொல்லுறன்.

சுரேயினி அக்கா, என்ன இப்பிடி சொல்றீங்கள். தடிமனே உங்களை பார்த்து பாவமென்று நினைச்சிடும். hospitalல்ல தொடங்கினதில இருந்து முடியும் வரை ஒரே அழுகை தான். Relax ஆகிறதற்கு மூன்று தடவை மருந்து
தொடர்ந்து தந்தார்கள்.

வாணி, நர்மதா நான் நல்லா ரெஸ்ட் எடுக்கிறன். படிக்கும் போது நினைப்பன். எப்படா நின்மதியா tv பார்க்கலாம் என்று. இப்ப அனுபவிக்கிறன்.

தாரணி எப்படி இருக்கிறீங்கள்?

நர் நீங்க சொன்ன எல்லாம் நானும் அதுதான் சோப் பேப்பர் டொபி பேப்பர் எல்லாம் நானும் தேடித்தேடி எடுத்து சேர்ப்பது இல்லை அதற்குள் மண்ணை நிரப்பி லக்ஸ்,சண்லைட் என்று பாக்க சோப்மாதிரியே ரோட்டில் ஒரு ஓரமாக ஆனால் பார்த்தால் பட்டென்று தெரிவதுபோல் போட்டு வைப்போம்.ஒளித்திருந்து பார்ப்போம் .அதை யாராவது நின்று எடுத்துப்பார்த்து ஏமாறும்போது எங்களுக்கு சரியான வெற்றிப்பெருமிதமா இருக்கும்.ஆனால் பிறகு திருந்திவிட்டோம்.

என் அன்புத்தங்கை ஜீவி கொஸ்பிடல்ல இருந்தனீங்களா?இனிமே அழக்கூடாது ஒகேவா.வாணி சொல்லுறதையெல்லாம் கேக்கக்கூடாது.சுரேஜினி அக்காமாதிரி வருத்தமெண்டா எழும்பாம படுத்திருக்கவேணும்.அப்பத்தான் உடன சுகம் வரும்.அம்மாவோட போன் பண்ணி நிறைய நேரம் கதையுங்கோ.அல்வின் அண்ட் சிப்மங்ஸ் குங்fஉ பண்டா காட்டூன் படம் எல்லாம் பாத்துட்டு நித்திரை கொள்ளுங்கோ.

வேணி, வாணி, காயத்ரி, எப்பிடி இருக்கிறீங்க?
ஜீவி, உங்களுக்காக செபிக்கிறேன். சர்ஜரி எல்லாம் நல்லபடி நடக்கும்.
தாரணி, சுரேஜினியோட கதச்சிட்டீங்கள். இப்ப சந்தோஷமா?
வத்சலா, சுரேஜினி, நீங்களும் டொபி பேப்பர்க் கூட்டமா? ;-D
நர்மதா, பதிலுக்கு நன்றி. நீங்கள் பிசியாக இருப்பீர்கள். நானே கூகிள் பண்ணிப் பார்க்கிறேன்.
இங்கு நான் பெயர் குறிப்பிடாது விட்ட மற்ற எல்லாத் தோழிகளுக்கும் என் அன்பு.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் செபா, எப்பிடி இருக்கிறீங்க?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மல்லாவி என் சொந்த இடம் தான். நாங்கள் மல்லாவி பாடசாலைக்கு (மல்லாவி மகாவித்தியாலயம்) பக்கத்து ஒழுங்கைக்குள் இருந்தோம். நீங்கள் சொல்லுற இடம் எல்லாம் தெரியும். உங்களுக்கு யாரை அங்கு தெரியும் என்று எனக்கு கூறுங்கள். விரும்பினால் tharany-s@hotmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்.
நீங்கள் அரியாலையா? கனடாவில் எங்கு இருக்கிறீங்கள். நான் ஸ்காபிரோவில் இருக்கிறேன். (கனடி & மைக்னிக்கல்). வேறு ஏதாவது கேட்பது என்றாலும் கேளுங்கள்.

**அன்புடன் தாரணி**

உங்கள் எல்லோருடனும் இணைந்து கதைக்க நானும் வந்து விட்டேன் மிக்க சந்தோசமாய் உள்ளது.

நன்றி

**அன்புடன் தாரணி**

இமாவும் ஜீவியும் சகோதரிகளா!! நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும். ஜீவி எப்பிடி இருக்கிறீங்க? இன்று காலையும் உங்களை நினைத்தேன்.
தாரணி, உண்மையில் நான் எப்பவாவதுதான் இங்கு எட்டிப் பார்ப்பது வழக்கம். இண்டைக்கு கொஞ்சம் கூட நேரம் நிக்கிறன். எப்பிடி இருக்கிறீங்கள்? நிச்சயமாக நேரம் கிடைகிறபோது கதைப்பேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஜீவி டியர்!!! உங்களுக்கு உடல்நலம் பெற எனது ப்ரார்த்தனைகள்... நல்லவிதமான பின் வந்து கதையுங்கோ தோழி!!!

தாரணி... என்னதிது.. வணக்கமெல்லாம் வச்சுகிட்டு.. இமாக்கு வேணா வையுங்கோ... மத்த எல்லாருக்கும் விவேக் ஷ்டையிலுல ஹாய் ஹாய் ஹாய் ந்னு வாங்க!!!

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்