பச்சரிசி மாவு கொழுக்கட்டை

தேதி: October 29, 2008

பரிமாறும் அளவு: 4 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி மாவு - 2 கப்
உப்பு - சிறிது
தேங்காய் - துருவியது அல்லது மிகப் பொடியாக அரிந்தது - 4 ஸ்பூன்


 

பச்சரிசி மாவைப் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.
பின், சீடை அளவுக்கு எடுத்து, சுண்டு விரல் நீளத்துக்கு(விளக்குத் திரி போல) உருட்டி, லேசாக, தட்டையாக சிறிது அழுத்தவும்.
மாவை இப்படி கொழுக்கட்டைகளாக செய்து எடுத்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கத் தொடங்கியதும், செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
கொழுக்கட்டைகள் வெந்ததும், மேலே மிதந்து வரும். இறக்கி, வடிதட்டில் வடிக்கவும்.
சிறிது ஆறியதும், தேங்காயுடன் சேர்த்து சாப்பிடலாம். கொதி நீரில் வேக வைக்காமல், இட்லித் தட்டில், ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். ஆனால் கொதி நீரில் செய்தால் சாப்ட் ஆக இருக்கும்.


வடித்த நீரில், உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments


ஆமா ! எங்க மாமியார் இப்படிதான் பண்ண சொல்வார்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எப்படி இருகிக தோலி கலா.