சீடி வால் ஹேங்கிங்

தேதி: October 29, 2008

4
Average: 3.1 (7 votes)

இந்த அழகிய சீடி வால் ஹேங்கிங்கை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்

 

சீடி - 3
பிரஷ்
பெயிண்ட் - சிவப்பு நிறம், பேப்ரிக் மஞ்சள் நிறம் அல்லது எனாமல் மஞ்சள் நிறம்
கம்
கோல்டன் லேஸ்
கிலிட்டர்ஸ்
ப்ளாஸ்டிக் பெல் - 3
ப்ளாஸ்டிக் பறவைகள் - 3
வெல்வெட் துணி

 

முதலில் சீடி வால் ஹேங்கிங் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு சீடியின் பின் புறத்தை திருப்பி வைத்து வழவழப்பான பகுதியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சமமான இடைவெளியில் வட்டங்கள் வரைந்து கொள்ளவும்.
வட்டம் வரைந்த பகுதி மற்றும் நடுப்பகுதி தவிர மற்ற இடங்களில் சிவப்பு நிறத்தால் பெயிண்ட் பண்ணவும். பெரிய இடைவெளிவிடுவதற்காக ஒரு வட்டத்தை சேர்த்து முழுவதும் பெயிண்ட் பண்ணவும்
காய்ந்த பிறகு அதன் நடுப்பகுதியில் மஞ்சள் நிறத்தால் பெயிண்ட் பண்ணவும். பின்பு வட்டத்தை சுற்றி மஞ்சள் நிற பெயிண்டால் சிறு சிறு புள்ளிகள் வைக்கவும்.
சீடியின் நடுவில் மஞ்சள் நிறத்தால் பெயிண்ட் செய்திருக்கும் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கிலிட்டர்ஸ் வைத்து அவுட்லைன் போடவும். இதே போல் சீடியின் ஓரத்தை சுற்றி மற்றொரு கிலிட்டர் கலர் வைத்து வட்டமாக போடவும்.
இது போன்று மூன்று சீடிகளில் வரைந்து வைத்து கொள்ளவும்
பறவையின் பின்புறத்தில் கம் தடவி மூன்று சீடியிலும் பெரிய இடைவெளியாக இருக்கும் பகுதியில் ஒட்டவும்.
பின்பு முதல் சீடியின் மேல்புறத்தில் டைமண்ட் வடிவத்தில் உள்ள டிசைனை ஒட்டவும்.
சீடியின் நடுவில் உள்ள துளையின் அளவிற்கு வெல்வெட் துணியை வெட்டிக் கொள்ளவும். அதில் கம் தடவி மூன்று சீடிகளின் பின்புறமும் ஒட்டவும்.
பிறகு கோல்டன் லேசை இரண்டாக மடக்கி மேலே மாட்டுவதற்கு தகுந்தாற்போல் முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
சீடியின் பின்புறத்தில் வெல்வெட் துணி ஒட்டியிருக்கும் நடுப்பகுதியில் கம் தடவி, அதில் முடிச்சு போட்டு வைத்திருக்கும் லேசை மூன்று சீடியிலும் ஒட்டவும்.
சீடியில் ஒட்டிய பிறகு லேசின் அடியில் போவ் போட்டுக்கொள்ளவும். அதன் அடியில் பெல்லை ஒட்டவும். அழகிய சீடி வால் ஹேங்கிங் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Waav! ! azhagaa irukku sindhu

இது என்னாலும் செய்ய முடியும்.. ரொம்ப ரொம்ப எளிதா இருக்கு... வால் ஹேங்கிங் ஃபார் டம்மீஸ்ன்னு சொல்லி இருக்கலாம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹை இது ரொம்ப அழகா இருக்குதே!!! வீட்டில் வீணா போன சிடி எல்லாம் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன்.இனிமே நானும் கலக்குவேன்ல :)).பாராட்டுக்கள் சிந்து.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹை இந்த வால் ஹேங்கிங் செய்ய ரொம்ப சிம்பிளாகவும் ஆனால் பார்க்க ரொம்ப கிராண்டாவும் இருக்குங்க.னன்றி உங்கலுக்கு இந்த ஐடியாவை கொடுத்ததர்கு.

இது மாதிரி ஒரு நாலு ஸ்டிரிங் சிடியை வால் ஹேங்கிங் செய்து ஒரு ப்ளெயின் வெள்ளை காட்டன் துணியில்/லேஸ் துணியில் ஒட்டினால் ஜன்னலுக்கு திரைசீலையும் கூடவெய்யிலில் பட்டு டாலடிக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சிந்து ரொம்ப அழகா இருக்கு நான் செய்துள்ளேன். இது அவள் விகடனில் வந்தது.
இது எல்லாருக்கும் செய்யலாம்

Hai Sindhu,

I've sent admin the picture of cd wall hanging made with the help of your guidelines. Thanks Sindhu & Admin (in advance).

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்த சீ.டி வால் ஹேங்கிங்கின் படம்

தாஹிரா பானு,

உங்கள் சீ.டி வால் ஹேங்கிங் அழகு. எப்படிச் செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்.

இமா

‍- இமா க்றிஸ்

பாராட்டுக்கு நன்றி இமா.

நட்சத்திர வடிவில் சிடியை வெட்டி அதன் ஓரங்களில் சமிக்கிகளை ஒட்டி நடுவில் (பின்பக்கமாக) கோல்டன் பேப்பர் ஒட்டியிருக்கிறேன். கோல்டன் பேப்பரை சுற்றி ஃபேப்ரிக் பெயிண்டால் புள்ளிகள் வைத்தால் வேலை முடிந்தது. சிடியின் ஜொலிப்பில் அந்த புள்ளிகள் சரியாக தெரியவில்லை. கீழே லேசினால் பொவ் வைத்திருக்கிறேன்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

சீ.டீ வெட்ட எதனைப் பயன்படுத்தினீர்கள், க்ராஃப்ட் நைஃப்-ஆ?

இமா

‍- இமா க்றிஸ்

Imma,

I used a kitchen knife (which is in excess).

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

super....

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta