ஹாட் & சோர் தால்

தேதி: October 31, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டு - 6 - 8 பற்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - சுவைக்கு


 

கடலைப்பருப்பை 1 - 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பூண்டை மெலிதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும். தக்காளி, வெங்காயம்துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகாய் தூள், உப்பு சேர்த்து 2 டம்ளர் நீர் சேர்க்கவும்.
ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி விடவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். எலுமிச்சம் பழச்சாறு மற்றும் நறுக்கிய மல்லித்தழை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
மழை காலத்துக்கேற்ற காராசாரமான சைட் டிஷ் இது.


சப்பாத்திக்கு மட்டுமல்ல இடியாப்பம், இட்லி, சாதம் அனைத்துக்கும் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க ஸாப்ட் சப்பாத்திக்கு நல்ல காம்பினேசன்.பூண்டு சேர்த்திருப்பதால் நன்றாக இருக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உண்மைதான் ஆஸியா.சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.சைட் டிஷ் என்ன பண்ணுவது என்று குழம்பிக்கொண்டு இருக்கத்தேவை இல்லை.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,
ஈசியாகவும் , ருசியாகவும் இருந்தது. காய் எதுவும் இல்லாத நேரத்தில் இந்த டிஷ் ஈசியாக செய்யலாம்.
my hubby liked this.

விஜி,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்களுக்கும்,உங்கள் கணவருக்கும் இந்த டிஷ் பிடித்து இருந்தது குறித்து மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,
பாசிப்பருப்பில் dhall செய்வார்களே,u knw ?தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/8490

http://www.arusuvai.com/tamil/node/6403

டியர் விஜி இந்த இரண்டு லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப thanks ஜலீலாக்கா,
செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் அளிக்கிறேன்.

காரகுழம்பிற்கு சூப்ப்ர் காம்பினேஷன்.நன்றி சாதிகாக்கா!!

சுவையாக இருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.மேனகா உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website