வெள்ளை சிக்கன் வறுவல்

தேதி: November 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 1.5 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
சிக்கன் - அரை கிலோ
எலுமிச்சைச்சாறு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

சிக்கன் துண்டுகளில் இரண்டு மூன்று கீறல் போடவும். மேற்கண்ட எல்லாவற்றையும் அரைத்து சிக்கனில் சேர்த்து பிரட்டவும்.
ஒரு மணிநேரம் ஊறவிடவும். எண்ணெயை காயவிட்டு அதில் ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் விரும்பாதவர்கள் அரை ஸ்பூன் எண்ணெய் மட்டும் சூடாக்கி அதில் சிக்கன் துண்டுகளை ஒரு பிரட்டு பிரட்டி தீயை குறைத்து தண்ணீர் பெருகியபின் தண்ணீரை வற்றவிட்டு இறக்கவும். சுவையான வறுவல் ரெடி


இது ஸ்டார் ஹோட்டல்களில் பரிமாறும் வகை. அதனால் அப்படியே ஆதென்டிக் இந்தியன் ஸ்பைசெஸ் அதிகம் இருக்காது. ஒரு சேஞ்ஜ்க்கு எப்போதாவது செய்யலாம் தவிர நம்ப சிக்கன் வறுவல், சிக்கன் மசாலா அளவுக்கு வராது.

மேலும் சில குறிப்புகள்


Comments

முழு சீரகமா அல்லது சீரகத் தூளா?எப்படி சேர்க்க வேண்டும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேற்கண்ட எல்லாவற்றையும் அரைத்து பிரட்டனும்.கொஞ்சமான்னா ஜார்ல பொடியாது அதனால நான் இஞ்சி பூண்டு விழுது+ஜீரகப் பொடி+ வ்ங்காயம் +மிளகு இதையெல்லாம் சேர்த்தே ஜாரில் போட்டு அரைப்பேன்.இது கேடரிங் படிக்கும் என் ஃப்ரென்ட் சொல்லித் தந்த குறிப்பு..

தாளிகா, நான் உங்கள் வெள்ளை சிக்கன் வறுவல் நேற்று செய்தேன்.டீப் fry செய்யவில்லை.shallow fry தான் செய்தேன்.நன்றாக வந்தது.சுவை பெப்பெர் சிக்கன் போல இருந்தது.அப்படி தான் இருக்குமா? இல்லை சீரகம் இன்னும் சேர்க்க வேண்டுமா?
நன்றி.

அப்படியா சந்தோஷம்..நான் இதுவரை பெப்பெர் சிக்கன் சாப்பிட்டு பார்த்ததில்லை அதனால் வித்தியாசமும் தெரியவில்லை.ஆம் இது ஷாலோ ஃப்ரை ஹான் செய வேண்டும்.அடுத்த முறை நான் சற்று ஜீரகம் தூக்கலாக போட்டு எய்து பார்த்து சொல்கிறேன்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் தயாரித்த வெள்ளை சிக்கன் வறுவலலின் படம்

<img src="files/pictures/aa116.jpg" alt="picture" />

நன்றி கீதா ஆச்சல் எனக்கு கூட பேர் தான் வெள்ளை கறுப்பு சிக்கன் வறுவலா வந்தது..உங்களுக்கு வெள்ளையாவே வந்தது..சந்தோஷம்

தளிகா,
மிகவும் நன்றி . என்னுடைய ஹஸுக்கு இந்த சிக்கன் மிகவும் பிடித்துவிட்டது.
இந்த குறிப்பினை பார்த்த பிறகு நான் இந்த முறையில் பல தடவை செய்துவிட்டேன். இதனை சாலட்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது..
டயட்டில் இருப்பதால் இப்படி மிகவும் ஸ்பைசியாக மற்றும் மாசாலா அதிகம் இல்லாமல் சாப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கின்றது.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்