மீன் உப்பாணம்

தேதி: November 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுதூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பற்கள்
உப்பு - சுவைக்கு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 3
தேங்காய் - 1 மூடி


 

தேங்காயைத்துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் அளவுள்ள இரண்டாம் தேங்காய்ப்பாலை எடுத்துக்கொள்ளவும்.
இதில் மஞ்சள்தூள், சீரகம், மிளகு, மல்லித்தூள், உப்பு, பூண்டு, கீறிய பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைக்கவும்.
நன்கு கொதி வந்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை போடவும்.
இன்னும் கொதித்ததும் சுமார் 1/2 டம்ளர் அளவுள்ள முதலாம் தேங்காய்ப்பாலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சோம்பு, வெந்தயம் சேர்த்து சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
மீன் துண்டுகள் மசாலாவுடன் நன்கு கலந்ததும். அடுப்பை அனைத்து விட்டு தாளிப்பை கொட்டி சூடாக பரிமாறவும்.


நெத்திலி மீன், கிளங்கா மீன், காரல் மீன் போன்றவை இந்த குழம்பிற்கு பொருத்தமாக இருக்கும். புளி, மிளகாய்த்தூள் சேர்க்காமல் செய்யும் ஒரு வித்தியாசமான மீன் குழம்பு இது. குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்ற பத்தியமான, தாய்ப்பால் அதிகளவில் சுரக்கச்செய்யும் ஆற்றல் உள்ளது. சிலர் சுறா மீனிலும் செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நைஸ் ரெசிப்பி.நாங்கள் சோம்பு சேர்க்க மாட்டோம்.மசாலா பொருட்களுடன் வெங்காயம்,தக்காளி,பூண்டு அம்மியில் தட்டி வழித்து போட்டால் சூப்பரா இருக்கும்.இன்னும் நிறைய ரெசிப்பி கொடுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி ஆஸியா..உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகின்றது.என் தம்பி மனைவி என்னக்கா..நான் வெஜ் ரெஸிப்பி போடவே மாட்டேன் என்கின்றீர்கள் என்று ஒரே குறை.இனி நான் வெஜ்ஜாக போடுகின்றேன் என்றுதான் மீன்குழம்பு ரெஸிப்பி போட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website