சோர் மீன் ஃப்ரை

தேதி: November 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் துண்டுகள் - 10
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 பின்ச்
புளிசாறு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 கப்


 

மசாலாபொடிகள், உப்பு, புளிச்சாறு, சோயா சாஸ் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீன் துண்டங்களை ஒவ்வொன்றாக மசாலாவில் தோய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு, நன்கு சூடு ஏறியதும் மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.


பாரைமீன், வஞ்சிரம், கொடுவா, வாவல் போன்ற பெரிய மீன்கள் இந்த வறுவலுக்கு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா இதற்கு இஞ்சி பூண்டு எதுவும் தேவையில்லையா?

ஜலீலா

Jaleelakamal

புளி சேர்ப்பதால் இஞ்சி-பூண்டு தேவை இல்லை ஜலீலா.

arusuvai is a wonderful website

சில நேரம் நான் இஞ்சி எலுமிச்சைக்கு பதில் (புளி தன்ணி (அ) தக்காளி பிழிந்து (அ) தயிர் சேர்ப்பேன் அதான் கேட்டேன்
ஜலீலா

Jaleelakamal

புளி,எலுமிச்சைக்குப்பதில் வினிகர் கூட சேர்க்கலாம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இதுவும் நான் செய்திராத ரிசிப்பி மிகவும் நன்றாக இருந்தது

லதா

இப்படிக்கு
லதா

அன்பின் லதா,உங்கள் பின்னூட்டத்திற்கு ந்ன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website