நண்டு மசாலா

தேதி: November 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (8 votes)

 

சதைப்பற்றான நண்டு - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கு
வறுத்து பொடி செய்ய:
மிளகாய் வற்றல் - 6
தனியா - 1 மேசைகரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலம் - 3


 

வறுக்கவேண்டிய மசாலா பொருட்களை நன்கு வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நறுக்கியவற்றை சேர்த்துக் கிளறவும்.
நன்குவதங்கியதும் ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும்.
உப்பு சுத்தம் செய்த நண்டு சேர்த்து கிளறி, 1/4 கப் அளவு நீர் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும்.
கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
நீர் எல்லாம் வற்றி நண்டு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், பொடி செய்த மசாலாவை தூவி கிளறி இறக்கவும்.
விரும்பினால் நறுக்கிய மல்லித்தழை சேர்க்கலாம்


மேலும் சில குறிப்புகள்


Comments

yepdi nanndu clean pannanum????????????/

ஸாதிகா அக்கா நண்டு மசாலா சூப்பராக வந்தது. கிட்டத்தட்ட இதே முறையில்தான் நாங்களும் செய்வோம். வறுக்கும் போது கொஞ்சம் தேங்காய்ப்பூவும் சேர்த்து வறுத்து அரைப்போம். தேசிக்காய் விடுவோம். நீங்கள் தக்காழி சேர்த்திருக்கிறீங்கள் நான் சேர்க்கவில்லை. தேங்காய்ப்பூச் சேர்க்காவிட்டலும் நல்ல சுவை கிடைத்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.நீங்கள் சொல்லுவது போல் தேங்காய்ப்பூவும்,தேசிக்காயும் சேர்த்து அடுத்த முறை செய்து விடுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

--

அன்புத்தங்கை அதிரா,
காராசாரமான நண்டு மசாலா.படம் வெகு அழகாக எடுத்து இருக்கின்றீர்கள்.மிகவும் நன்றி.எனக்கும் ஒரு ஆசை கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவரின் குறிப்புகளில் இருந்தும் ஓரிரு குறிப்பையாவது இப்படி படம் எடுத்து அனுப்ப வேண்டும்.நிர்வாகத்தினருக்கு வேளைப்பளு அதிகமாகி விடுமோ என்றும் அச்சமாக உள்ளது.வெளியிட்ட அறுசுவை இணைய தள நிர்வாகத்தினருக்கும் நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் தோழிகளே நான் இந்தியா போய் இருந்த போது ஒக்கனேக்கல் என்ர இடத்தில் மீன் சாப்பிட்டேன் (அங்க சமைக்க நிறய அம்மாமார் இருக்றார்கள் அவர்களிடம் மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொன்னோம் )நல்ல ரேஷ்ரா இருந்தது அது போல் யாருக்கும் சமைக்க தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஷ் ( அடுத்த கிழமை குழந்தை பெற இருக்றேன்ப்பா இந்த கர்ப்பிணி பெண்னின் ஆசையை நிறைவேற்ருங்க)

அன்புடன்
துஷி

ஸாதிகா அக்கா, தயங்காமல் படமெடுத்து எங்கட அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். தாமதமானாலும் அவர் இணைப்பார்(கள்). இந்த படமெடுக்கும் முறையை எமக்கு அறிமுகப்படுத்தியதே அட்மின் தான். அவரது வேண்டுகோளின்படியே படமெடுக்க ஆரம்பித்தோம்.. இப்பவல்ல முன்பே. எனது ஒவ்வொரு படமும் நன்றாகவே வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீங்கள் மிக்க நன்றி.

இந்த துஷிப்பிள்ளைக்கு கொஞ்சம் மீன் குழம்பு அனுப்பிவைக்க முடியுமோ:)?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆகட்டும் அதிரா,அவ்வப்பொழுது படம் எடுத்தும் வருகின்றேன்.பிசியில் அப்லோட் பண்ணும் முன் எனது திருவருட்செல்வங்கள் கேமராவைத்த்தூகிக்கொண்டு ஓடி விடுகின்றார்கள்.அப்புறம் படமெல்லாம் அம்பேல்தான்.இனி கவனமாக உடனுக்குடன் அப்லோட் செய்து விட வேண்டும்.
துஷிக்கு மீன் குழம்பு..பண்ணலாம் தான்.ஒகேனகல்லில் செய்யும் மீன் குழம்பு எப்படி இருக்கும் என்று தெரியாது.பொதுவாக எனக்கு வெளியில் மீன் குழம்பு(பெரிய ஹோட்டல் ஆனாலும்)சாப்பிடப்பிடிக்காது.பீச்சுக்கு சென்றால் மீன் வறுவல் கடை ஓரமாக நடக்கக்கூட மாட்டேன்.மஹாபலிபுரத்தில் கடற்கரைக்கு செல்வதென்றால் ,சிறிய நடைபாதையை தாண்டித்தான் செல்ல வேண்டும்.அங்கு ஏகப்பட்ட மீன் வறுவல் கடைகள் இருக்கும்.அதனை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website