காராமணி வடை

தேதி: November 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

காராமணி - 500 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வற்றல் - நான்கு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காராமணியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊற வைத்த காராமணியை மிக்ஸியில் போட்டு பருப்பு உடையும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு விழுதாக அரைக்க தேவையில்லை. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். கலந்த பின்னர் உப்பின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். வடையின் உள் பகுதி நன்கு வேக தீயின் அளவை குறைத்து வைத்து அதிக நேரம் வேக வைக்கவும்.
சுலபமாக செய்யக் கூடிய சுவையான காராமணி வடை தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா வாவ் ரொம்பா நல்லா இருக்கு. நான் இதே மாதிரி சென்னாவில் வடை,கட்லெட் செய்துள்ளேன். இதே மாதிரி காராமணியில் டிக்கி செய்வேன்.கண்டிப்பா நான் செய்கிறேன், இந்த பருப்பு உடம்புக்கு ரொம்ப நல்லது.

அதிரா, காராமணி வடை பார்க்கவே நல்லா இருக்கு. செஞ்சுப் பார்க்கணும். நல்லா சத்தான ரெசிப்பியாவும் இருக்கு. எண்ணெய் அதிகம் குடிக்காத மாதிரியும் இருக்கு. நான் இதை சுண்டல், கவுனி அரிசி, புளிக்குழம்புக்கு மட்டும்தான் உபயோகித்து இருக்கிறேன். வடையும் செஞ்சிட வேண்டியதுதான். நல்ல ரெசிப்பி கொடுத்ததுக்கு நன்றி.

வணக்கம் திருமதி. அதிரா,

காராமணி என்ரால் என்ன? பார்க்க எப்படி இருக்கும்?
அல்லது வேரு பெயர் உன்டா?

தயவு செய்து விளக்கம் தரவும்

நன்றி
கீர்த்தீஷ்வரி

Keerthi

வாவ் அதிரா காராமணியில் சுண்டல், புளி குழம்பு தான் செய்து இருக்கேன் ஆனால் வடை செய்ததில்லை. இதுஎப்படி கிர்ஸ்பியா இருக்குமா?
ஜலீலா

Jaleelakamal

அதிபா
காராமனியின் ஆங்கிலப் பெயர் என்ன?

காராமணி வடை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது, சுவையும் அபாரம். நன்றி மிஸஸ் அதிரா. படம் அட்மின் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஜலீலா மேடம் காராமணி வடை டேஸ்டியாவும், நல்லா க்ர்கிருஸ்பியாவும் வந்தது. சும்மா ட்ரை பன்னி பாருங்க பயப்படாம!!!!.

இப்படிக்கு
இந்திரா

indira

ஆகா, காராமணி வடை,
நான் இத்தனை பதிவுகளையும் இப்போதான் பார்க்கிறேன். உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டோ.... சத்தியமாக இக் குறிப்பு அறுசுவையின் முகப்பில் வரும் வரை எனக்கு காராமணி என்றால் என்னவென்றே தெரியாது, இங்கே வேறு குறிப்புக்களில் படித்தேன் காராமணி என்று, அப்போ நினைத்தேன் குண்டுமணிபோல் ஏதோ ஒன்று என.

இதை நாங்கள் கெளபி என்றுதான் அழைப்போம். இங்குகூட கள்பி வடை என்றுதான் அனுப்பினேன், அட்மிந்தான் சரியான தமிழில் காராமணிவடை எனப் போட்டார், நான் பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன் இதுதானா அது என்று. இதை அதிகம் அரைக்கக்கூடாது, பருப்பு உடைத்தால் போதும் நல்ல சுவையாக இருக்கும். நவராத்திரி காலங்களில் இதில் சுண்டல் செய்வேன் மிஞ்சி விடும் உடனே இப்படி வடையாக்குவேன் திரும்பிப் பார்ப்பதற்கிடையில் முடிந்துவிடும்.

விஜி செய்து பாருங்கோ.
தேவா, உண்மைதான் எண்ணெய் அதிகம் குடிக்காது, செய்துபாருங்கள்.
கீர்த்தீஷ்வரி, ஆதீ88 இது கெளபி என்போமே அதுதான் இதை ஆங்கிலத்தில் black eyed beans என்போம். சுப்பமார்கட்டில் கிடைக்கும்.

ஜலீலாக்கா, தேவா இதில் புளிக்குழம்பு செய்வதாக எழுதியிருக்கிறீங்க நான் இதுவரை செய்ததில்லை, இங்கே குறிப்பிருக்கும் என நினைக்கிறேன், செய்து பார்க்கிறேன், ஜலீலாக்கா வடை செய்யுங்கோ சிறிய உருண்டைகளாக தட்டி குறைந்த நெருப்பில் அதிகமாக பொரிய விடவும்.

ஆ.. இந்திரா செய்துவிட்டீங்களா? மிக்க நன்றி படம் வரட்டும் பார்ப்போம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

காராமணி ஆங்கிலபெயெர் - Cowpea- Vigna unguiculata subsp. unguiculata.
பச்சையாக இருக்கும் இதன் காய்களை உப்பு போட்டு அவித்து உரித்து சப்பிடுவார்கள். இதனை தட்டை பயிர் என்றும் சொல்லுவார்கள்.

இப்படிக்கு
இந்திரா

indira

கவ்பி என்ரால் எனக்கு தெரியும். செய்து பார்த்து விட்டு பதில் எழுதுவேன்.
அதிபா

அதிரா அவர்கள் குறிப்பிட்டு இருந்ததுபோல் இந்த வடையை கெளபி வடை என்றுதான் கொடுத்து இருந்தார். cowpea ஐ சட்டென்று தமிழில் படிக்கும்போது கெ ள பி என்று படிக்கின்றார்கள். முதலில் நானே அப்படித்தான் படித்தேன். அதுவாவது பரவாயில்லை. இங்கே ஒருவர் பி யை வி ஆக்கி படித்துவிட்டார்:-) எதற்கு வம்பு என்று காராமணி என்றே கொடுத்துவிட்டேன்.

எங்கள் வீட்டில் அம்மா காராமணி வடை அடிக்கடி செய்வார்கள் (எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும்;-)). இங்கே கிடைக்கும் காராமணி சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.

இந்த குறிப்பினைப் பார்த்து செல்வி. இந்திரா அவர்கள் செய்த காராமணி வடையின் படத்தினை இத்துடன் இணைத்துள்ளேன்.

<br /><br />
<img src="files/pictures/karamani_vadai.jpg" alt="karamani vadai" />

மிக்க நன்றி இந்திரா,
வடை மிக அழகாக இருக்கிறது. என்னுடையதைவிட உங்களுடையது அதிக கிறிஸ்பியாக இருக்கு. நேரம் செலவழித்து இதை இணைத்த அட்மினுக்கும் நன்றி.

இனியும் அம்மாவின் கையை எதிர்பார்க்கக்கூடாது தெரியுமோ?:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அட்மின் சார் ரொம்ப நன்றி படத்திற்கு(????)
மேலும் ஒரு தகவல்,
நேத்து மாக் பிரசெண்டேசன்.
ஒகே வாங்கியாச்சு. வியாழன் அன்று ஃப்பைனல்.
ஆஹா....... இப்ப புரியுது படம் வர ஏன் இவ்வளவு தாமதம் என்று. அதிராக்கா உங்களுக்கும் தானே!!!!!

இப்படிக்கு
இந்திரா

indira

அதிரா நல்ல குறிப்பு குடுத்திருக்கீங்க. இந்த வெள்ளை காராமணி சுவை பிடிக்காதுன்னு அம்மா வாங்கவே மாட்டாங்க. இனி உங்க வடை செய்யவே வாங்கலாம்'னு சொல்லிட்டாங்க. ரொம்ப நல்லா இருந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, வடை சாப்பிட்டீங்களா? பதில் புரியவில்லை. நன்றாக இருந்தது என்றீங்கள் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா காராமணி வடை நேற்று செய்தேன் நன்றாக இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அதிரா ரெம்ப எளிமையான சுவையான குறிப்பு,நான் கொஞ்சம் தான் செய்தேன்,அதனால் எனக்கு 2 தான் கிடைத்தது,அத்தனையும் காலி,நல்ல கிரிஸ்பியா இருந்தது,மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அநாமிகா, ரேணுகா இருவருக்கும் மிக்க மிக்க நன்றி. வடை என்றால் எங்கள் வீட்டிலும் சுடச்சுட முடிந்துவிடும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்