முருங்கைக்கீரை பிரட்டல்

தேதி: November 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலிலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

 

முருங்கைக்கீரை - ஒரு பெரிய கட்டு (மூன்று டம்ளர் அளவு)
வெங்காயம் - மூன்று
பூண்டு - நான்கு பற்கள்
காய்ந்த மிளகாய் - ஐந்து
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
பாசிப் பருப்பு - அரை கப் (50 கிராம்)
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - நான்கு பத்தை (துருவியது)
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


 

முருங்கைக்கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாசிப் பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், உளுந்து போட்டு தாளித்து விட்டு பூண்டை தட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் கழுவி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும். கீரை நன்கு வதங்கி சுருங்கி விடும்.
கீரையுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாகும்படி கிளறி விடவும்.
பின்னர் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
கிளறிய பின்னர் 5 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும்.
முருங்கைக்கீரை பிரட்டல் தயார். இந்த முருங்கைக்கீரைக்கு துவரம் பருப்பை வேக வைத்து செய்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். இதை ப்ளைன் தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

முருங்கைக்கீரை செய்யும் போது நிறைய வெங்காயம், தேங்காய் சேர்த்து பிரட்டினால் நன்றாக இருக்கும். தேங்காய் அதிகம் சேர்ப்பதற்கு பதில் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆ..ஆ.. என்ன சுவை!!!!

எனக்கு மிகவும் பிடித்தமானது முருங்கைக்கீரை பிரட்டல்.., அதுவும் பருப்புடன்...

கீர்த்தீஷ்வரி

Keerthi

மேடம் இந்த முருங்கை கீரைக்கு பதில் வேறு ஏதாவது கீரையில் இதே செய்முறயில் செய்யலாமா? ஏனெனில் இங்கு இந்த கீரை கிடைப்பதில்லை..வெறும் ஸ்பினாச் என்றுதான் இருக்கிறது..இதை பார்த்தும் சாப்பிட தோணுது அதான் கேட்டேன்..

டியர் கீர்த்தி செய்து பார்த்து சொல்லுங்கள். எல்லா வகையான கீரையிலும் இதை இப்படி செய்யலாம்.

ஜலீலா

Jaleelakamal

டியர் சாந்தோ எனக்கு முன்பு இங்கு பாலக் கீரை மட்டும் தான் கிடைக்கும் அப்போது கீரை வகைகள் எல்லாமே (பாலக் கீரையில் தான் - கடைசல் சூப், புளி கடைசல், பிரட்டல்,பொரியல் ) ஆனாஅல் உப்பு மட்டும் கொஞ்சம் குறைத்டு போடுங்கள்.
பாலக் நல்ல சுருங்கிவிடும். கீரைவகைகளுக்கு உப்பு கம்மியாக பொட்டால் போது. துவரம் பருப்பு சாம்பாருக்கு வேக வைக்கும் போது கூட ஒரு பெரிய கரண்டி அளவு எடுத்து போடலாம்

Jaleelakamal

சரிங்க மேடம் நீங்க சொன்ன பாலக் கீரை இங்கே கிடைக்குதானு பார்த்து செய்துட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்..ரொம்ப நன்றி உங்கள் உடனடி பதிலுக்கு

வணக்கம்
முருங்கை கீரை chineese store ல் கிடைக்கும்.நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் chineese store இருக்கா என்று search பண்ணி பாருங்கள்.

Chinese store இருக்குபா..ஆனால் அங்க இருக்கிற மாதிரி தெரியல..ஆனால் நான் விசாரிச்சு பார்க்கிறேன்..ரொம்ப தேங்ஸ் பா இவ்ளோ அக்கரையா சொன்னதற்கு..

வணக்கம்
நீங்க U Sல் எங்க இருக்கிறீர்கள்?

Thamari lives in Jersey City ,NJ

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

thanks....

அன்புள்ள ஜலீலா!

உங்களின் முருங்கைக்கீரை பிரட்டல் வரிக்கு வரி காப்பி அடிக்கப்பட்டு உள்ளதைக்கீழே உள்ள லிங்க்கில் பார்க்கவும். இதை எதேச்சையாக இப்போது பார்க்க நேர்ந்தது.
http://adiraixpress.blogspot.com/2008/11/blog-post_6776.html

மனோ அக்கா இப்ப தான் நானும் பார்த்தேன் இப்ப என்ன செய்வது.

Jaleelakamal