வேர்கடலை சட்னி

தேதி: November 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

வேர்க்கடலை - ஒரு கப்
மிளகாய் வத்தல் - 3
தேங்காய் - ஒரு துண்டு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை


 

வேர்கடலையை வறுத்து தோல் உரித்து வைக்கவும். இதில் வறுத்த மிளகாய் வற்றல், துருவிய தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
தேவையானால் எண்ணெய் விட்டு தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.


கிராமத்தில் என் பாட்டி செய்யும் முறை. சாப்ட்டான தோசை, இட்லிக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள் கொடுத்த குறிப்புக்கள் அனைத்தும் அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கம்மாவும் இப்படித்தான் செய்வாங்க.நல்லாயிருந்தது வனி.

மிக்க நன்றி மேனகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா