இருகடலை சட்னி

தேதி: November 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேர்க்கடலை - அரை கப்
பொரிக்கடலை - கால் கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - ஒரு துண்டு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - ஒரு சின்ன துண்டு
தாளிக்க:
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலைப் பருப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை


 

எண்ணெய் விட்டு காய்ந்ததும் வேர்க்கடலை, பொரிக்கடலை, பச்சை மிளகாய், புளியை வறுத்து வைக்கவும்.
இதில் துருவிய தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தேவையானால் எண்ணெய் விட்டு தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.


சாப்ட்டான தோசை, இட்லிக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

காலையில் தக்காளி தோசைக்கு இந்த இருகடலைசட்னி செய்தேன். நல்லா இருந்தது. வனிதா ஒரு சந்தேகம், பொரிகடலைன்னு நீங்க போட்டிருப்பது எதனை? பொட்டுக்கடலைதானே?
நாங்க வெள்ளைகலரில் அவல் மாதிரி இருக்குமே, சரஸ்வதிபூஜைக்கு கூட படைப்போமே அதைத்தான் பொரிகடலைன்னு சொல்வோம்.எப்படியோ, நான் போட்டது பொட்டுக்கடலைதான்!
நன்றிப்பா!

சந்தேகமே வேண்டாம் சாய் கீதா அது பொட்டுகடலை தான். சரியா தான் போட்டு இருக்கீங்க. நல்லா வந்துச்சா? மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரு கடலை சட்னி எனக்கு தேங்காய் இல்லை ஆனாலும் சுவை அருமையோ அருமை.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க நன்றி இலா :) தேங்காய் கொஞ்சம் தான் சேர்ப்போம், இல்லாவிட்டாலும் ரொம்ப வித்தியாசம் இருக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா