பனீர் பட்டர் மசாலா 1

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - கால் கிலோ
பச்சை பட்டாணி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 விழுது
சீரகம் - அரை தேக்கரண்டி
மல்லித்தழை - கால் கட்டு
வெண்ணெய் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு குழி கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பனீர், பச்சை பட்டாணி எல்லாத்தையும் போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும்.
இத்துடன் உப்பும் சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறக்கும் பொழுது பட்டர், முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்.
பனீர் தயார் செய்யும் முறை:
பாலை அடுப்பில் வைத்து பொங்கும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பால் திரிந்து வரும்.
அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி அதை ஒரு தட்டின் மீது துணியோடு வைத்து அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தினால் சமமாக வரும்.
இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது 2 மணிநேரம் பிரிட்ஜில் இருக்க வேண்டும்.
பின்னர் அதை வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்