காப்சிகம் பச்சடி

தேதி: November 6, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

காப்சிகம் - 1 பெரியது (பெரிய துண்டுகளக்கியது)
தயிர் - 1 கப்
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 இலைகள்
உப்பு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - கொஞ்சம்


 

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து துண்டுகளாக்கிய காப்சிகமை போட்டு நன்றாக கலந்து வதங்க விடவும்.
பத்து நிமிடம் ஆன பிறகு திரும்ப நன்றாக கிளறி விடவும். காப்சிகம் நல்ல வதங்கியவுடன் அதில் தயிரை கலந்து மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


இந்த காப்சிகம் வெஜிடெபுள் உடம்பிற்கு நல்லது காரமில்லாதது.
கலந்த சாததிற்கு ரொம்ப நல்ல காம்பினேஷன். இது எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்