ஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ் சமையல் குறிப்பு - படங்களுடன் - 9734 | அறுசுவை


ஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்

வழங்கியவர் : shadiqah
தேதி : Sat, 08/11/2008 - 16:27
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3
1 vote
Your rating: None

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள சிக்கன் ப்ரைட் ரைஸ். நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்

 

 • பாஸ்மதி அரிசி - 2 கப்
 • போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்
 • முட்டை - 3
 • சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
 • க்ரீன் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
 • ரெட் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
 • டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி
 • அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி
 • மிளகு பவுடர் - ஒரு தேக்கரண்டி
 • உப்பு - சுவைக்கு
 • பட்டர் - 2 மேசைக்கரண்டி
 • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 • கேரட் - 2
 • குடைமிளகாய் - ஒன்று
 • பீன்ஸ் - 10
 • ஸ்பிரிங் ஆனியன் - சிறு கட்டு
 • வெங்காயம் - ஒன்று
 • பூண்டு - 4 பற்கள்

 

சிக்கனை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சாதத்தை வேக வைத்து உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காய்கள் மற்றும் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், பூண்டை மிகவும் மெல்லியதாகவும் நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மெல்லியதாக நறுக்கிய பூண்டை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், ஸ்பிரிங் ஆனியனின் அடிப்பகுதியில் உள்ள வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு கேரட், பீன்ஸ் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு காய்களை எண்ணெயிலேயே வேக விடவும். அதன் பின்னர் சாஸ் வகைகள், உப்பு, அஜினமோட்டோ சேர்த்து கிளறி விடவும்.

அதில் குடைமிளகாய், பாதியளவு வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

இதனுடன் உதிர் உதிராக வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு எல்லா ஒன்றாக சேரும்படி கிளறவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு பொரிய விடவும்.

பொரித்த முட்டை, வேக வைத்து நறுக்கிய சிக்கன், மிளகு தூள் மற்றும் மீதமிருக்கும் வெங்காயத்தாள் ஆகியவற்றை கலந்து வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து நன்கு பிரட்டி விடவும்.

சுவையான ஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ் தயார். சிக்கன் 65, ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.Super

Very nice to see... Iam going to try this... Madem i've one doubt wht is green chilli sauce? where i'll get this?

பிரியா-பிரைட் ரைஸ்

பிரியா,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.கிரீன் சில்லி சாஸ் எல்லா டிபார்ட்மெண்ட் கடைகளிலும் கிடைக்கும்.இங்கு சென்னையில் சிறிய மளிகை கடைகளிலும் கிடைக்கும்.100 மில்லி லிட்டர் அளவில் இருந்து 1லிட்டர் வரை கிடைக்கின்றது.தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.பச்சை மிளகாய் பேஸ்ட் தான் கிரீன் சில்லி சாஸ்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா

சூப்பர் செய்து விட்டு சொல்லுகிறேன். ஊருக்கு போய்தான் செய்து பார்க்க வேண்டும். பார்த்ததும் சாப்பிட தோனுது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா

தனிஷா,ஊருக்கு போகும் பரபரப்பிலும் அறுசுவையுடன் ஒன்றி விட்டீர்களே?கீப் இட் அப்.இந்தியா வந்தால் பிசி முன் அமர முடியுமா?
பின்னூட்டத்திற்கு நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,

நல்ல நல்ல ரெசிப்பீஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்.வெரி குட்.சாதம் நல்ல உதிரியா பார்க்கவே அழகாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செஷ்வான் சிக்கன்

வாவ் அருமையான செஷ்வான் சிக்கன் பிரைட் ரைஸ்

ம்ம் ஸாதிகா அக்கா அசத்துங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஆஸியா-பிரைட் ரைஸ்

ஆஸியா,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் ஐடி தனிஷா விடம் வாங்கிகொள்ளட்டுமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலா-பிரைட் ரைஸ்

அட..அசத்தல் ராணியிடம் இருந்து அசத்தலான பின்னூட்டம்.நன்றி ஜலீலா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,

தாராளமாய் வாங்கிக்கொள்ளவும்.இன்ஷா அல்லாஹ் பேசுவோம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

thanks madem... i'll try

thanks madem... i'll try this..