ஸ்டவ் பர்னரைக் கொண்டு விநாயகர் மேடை செய்வது எப்படி?

தேதி: November 10, 2008

5
Average: 4.8 (4 votes)

 

சிறிய விநாயகர்
டிசைன் லேஸ்
தெர்மோகோல்
ஸ்டவ் பர்னர்
வெல்வட் சீட்
பெவிக்கால்
சதுர கண்ணாடி
துளைகள் உள்ள மேட்டில் உல்லன் நூல் வைத்து பிண்ணியது ஒரு ஸ்டிரிப்

 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
முதலில் ஸ்டவ் பர்னரில் லேஸை இடை வெளியில்லாமல் சுற்றிக் கொள்ளவும். கடைசியில் முடியும் போது பெவிக்கால் வைத்து உள்பக்கமாக ஒட்டி விடவும்.
பர்னரின் அடிப்பாகத்தின் அளவிற்கு தகுந்தாற்போல் தெர்மோகோலை வெட்டிக் கொள்ளவும்.
அதன் பின்னர், தெர்மோகோலின் அளவிற்கு வெல்வட் சீட்டை 2 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். பிறகு அந்த வெல்வட் சீட்டை தெர்மோகோலின் இருபுறமும் பெவிக்கால் வைத்து ஒட்டி விடவும்.
வெல்வட் சீட் விநாயகர் கலரை விட சற்று மங்களான கலராக இருக்க வேண்டும். விநாயகர் கறுப்பு நிறத்தில் இருந்தால், வெல்வட் சீட் வெள்ளை நிறத்தில் எடுத்துக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும். வெல்வட் சீட் ஒட்டிய தெர்மோகோலை பர்னரின் உள் வைக்கவும்.
அதன் பிறகு கத்திரிக்கோலை வைத்து தெர்மோகோலில் படத்தில் காட்டியுள்ளபடி 3 ஒட்டைகள் போட வேண்டும். எதிர் எதிர் புறமாக இரண்டு ஓட்டையும் பிறகு மற்றொரு புறம் ஒரு ஒட்டை போடவும்.
உல்லன் நூலில் பிண்ணிய அந்த ஸ்டிரிப்பை எடுத்து எதிர் எதிர் புறமாக உள்ள ஒட்டையில் சொருகவும்.
மற்றொரு ஒட்டையில் சதுரமாக உள்ள கண்ணாடி துண்டை எடுத்து டைமண்ட் வடிவில் இருக்கும்படி சொருகவும்.
விநாயகரின் அடிப்பகுதியில் பெவிக்கால் தடவி மேடையில் சொருகி வைத்திருக்கும் இரண்டு ஸ்டிரிப்பிற்கு நடுவில் வைக்கவும்.
இதை பூஜை அறையில் வைக்கலாம். கண்ணாடியை விட விநாயகர் சிறியதாக இருக்க வேண்டும். அப்போது தான் கண்ணாடியில் பார்க்கும் போது பின்புறம் முழுவதும் தெரியும். அவரவர் விரும்பிய சிலையை வைத்துக் கொள்ளலாம்.
இந்த அழகிய விநாயகர் மேடை செய்முறையை விளக்கியவர் திருமதி. சரோஜினி பன்னீர்செல்வம் அவர்கள். நாகை நகரில் 20 வருடங்களுக்கு மேலாக கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகின்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனைத் தவிர தையல் வகுப்புகளும் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அழகாக இருக்கிறாது மேம். என்னிடம் ஸ்டவ் பர்னர் இல்லை. ஆனா இதே வடிவத்தில் விளக்கின் அடித்தட்டு ஒன்று உள்ளது. முயற்சித்து பார்க்கிறேன். வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

விநாயகர் மேடை மிகவும் அழகாக இருக்கிறது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta