சமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்!!!!

அன்புத் தோழிகளே....

எனக்கொரு நீண்ட ஆசை நெடுநாளாகவே மனதில் இருக்கிறது, நேரமின்மையால் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எப்படியும் ஆரம்பித்திட வேண்டும் என்ற முடிவோடுதான் ஆரம்பிக்கிறேன். தயவு செய்து இதில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், அதிகம் எத்தனையும் செய்யலாம். நாளை புதன் கிழமை ஆரம்பிப்போம், அடுத்த புதன்கிழமை அடுத்தவரின் குறிப்புக்குச் செல்வோம். இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ அதிராவுக்காக இல்லை, ஏதோ எம்மால் முடிந்த ஒரு ஊக்குவிப்புத்தான். முன்பும் இப்படி தொடங்கிப் பின் பாதியில் நின்றுபோனது. இதையாவது எல்லோரும் மனம் வைத்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். நாளை ஆரம்பமாவது ஜலீலாக்காவின் குறிப்புக்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

விடமாட்டீங்க போலிருக்கே!நான் ட்ரை பண்ணுகிறேன்பா.கண்டிப்பா அவங்க குறிப்பு ஏதாவது செய்ய முடிந்தால் இங்கு பதிவு போடுகிறேன்(ஆனால் எதிர்பார்க்காதீங்க ரொம்ப!!!!முடிந்தால்.முடிந்தால்..மட்டுமே.)ஏன்னா பல சமயம் இங்கு அறுசுவை ஓபனே ஆகாதுபா.

சமைக்கும் நேரம் பார்த்து சரியா சதி பண்ணி பல குறிப்புகளை கோட்டை விட்டிருக்கேன்.too many connections சமீபகாலமா நான் இத்தளத்தை ஓபன் செய்யும் போது வரும்.அதனாலேயே இப்போ நான் வருவது குறைந்து விட்டது.ஆனா நீங்க இவ்ளோ தூரம் சொன்னதால் நான் ட்ரை பண்றேன்.போதுமா!!!

ஓக்கே. ரொம்ப ஈஸிதான். நான் ஊரில் இருந்துகூட முயற்சி செய்கிறேன் முடிந்தால்..

இந்திரா அந்த லிங்கில் ரமணிசந்திரன் நாவல் நிறைய இருக்கு. ஆனால் டவுண்லோட் பண்ணமுடியல. எல்லாமே லிமிட்டேட் ஒன்லி என்று வந்ததால் நான் படிக்காத நாவலை டவுண்லோட் பண்னமுடியல வெறுத்து போய்விட்டு விட்டேன். நீங்க நிறைய புக் வச்சிருந்தால் எனக்க்கு மெயில் பண்ணுங்கப்பா நான் ஐடி தரேன்.

சுகன் நீங்க சொல்வது சரிதான் எனக்கும் நிறைய கனைக்ஷன் வருது. அன்னைக்கு என்னோட கனைஷன் நான் கனைக்ட் பண்ணவே இல்லை. பார்த்த லேப்பில் நெட் கனைட்லேயே இருக்கு. இந்த மாதிரி நிறைய இங்கே. அதனால் என்னுடைய கனைக்ஷன் எப்பவுமே ஆன்ல வச்சிடுவேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி சுகன்யா, தனிஷா
சுகன்யா,, நானும் எழுத நினைத்து பின்பு எங்கள் நெற்றில்தான் பிழையோ என விட்டுவிட்டேன்... எனக்கும் சரியான கஸ்டமாக இருக்கு அறுசுவை பார்க்க, ஒரு பதிவுக்கு ஒரு நீண்ட நேரம் எடுக்கிறது, எரர்தான் வருகிறது... சரி சரி அசத்துவோம்... எங்கே மிகுதிப் பேரைக் காணவில்லை..... வருவார்கள்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு அருசுவை பார்க்கும்போது error வந்தது கிடையாது.சில சமயம் slow.நானும் கலந்து கொள்கிரேன்.இன்று ஜலீலாவின் வெஜ் சூப்.அவங்க குக்கரில் வேக சொல்லி இருக்காங்க,நான் எப்பவும் வெஜ் சூப் குக்கரில் வைக்கமாட்டேன்.மெத்தட் அதே மாதிரி செய்து பின்னூட்டம் சொல்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன். நானும் இதில் இணைகிறேன். என்ன குறிப்பு எடுத்து செய்யப் போகிறேன் என்று பின்பு கூறுகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிக்க நன்றி ஆசியா,
கலந்துகொள்ளுங்கோ, முடிவில் என்ன என்ன செய்தீங்களெனப் போடுங்கோ.

கதீஜா, ரேணுகா , வாணி .... தவறவிட்டுவிட்டேன், வாங்கோ கலந்துகொள்ளுங்கோ. இன்னும் யாரையெல்லாம் விட்டேனோ தெரியேல்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி வத்சலா ,
பார்த்தீங்களா, கொஞ்ச நாளாக உங்கள் பெயர் கண்ணில் படவில்லை, அதனால் தவறவிட்டுவிட்டேன், இருந்தும் நீங்கள் வந்து இணைந்து கொண்டீங்களே.. மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
நானும் ட்ரை பண்ரேன் அவங்க குறிப்ப பார்த்து முடிக்கவே எனக்கு 2 நாள் வேனும் இதுல எது செய்றதுன்னு பெரிய குழப்பமே வந்துரும் இருந்தாலும் நான் ட்ரை பண்ரேன் .அப்புறம் ஒரு குறிப்பா இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா:-)(என் பேர வேற முதல சேத்துருக்கிறீங்க) கண்டிப்பா முயற்ச்சி பண்றேன்.(ஏன்ன எனக்கு அறுசுவைல உட்கார்ந்து இருக்கிறதே வேலைய்யா இருக்குல்ல கொஞ்ச ரெஸ்ட் எடுக்கும் போது ட்ரை பண்ரேன்)

கவி எஸ் மிக்க நன்றியப்பா.....
இந்த பீல் பண்ணுற நேரத்திலேயே 2 குறிப்புச் செய்திடலாம். நீங்க கட்டாயம் கலந்துகொள்ளவேணும். ஏதோ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கோ... முதலில் குறிப்புத் தேடாமல், இன்று என்ன சமைக்கப் போறீங்கள் என்ன இருக்கிறது என தெரிவு செய்துவிட்டு, பிறகு அதுக்கேற்ற குறிப்பு எதுவென்று கண்டுபிடித்துச் செய்வது சுலபம். முடியாதுவிட்டால் ஜலீலாக்காவை அழையுங்கோ அவ கண்டுபிடித்துக் கொடுப்பா... அவ சும்மாதானே இருக்கிறா:) ஒகேயா கவி?...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா கண்டிப்பா கலந்துக்கிறேன்..ஆனால் ரொம்ப மக்கு பிள்ளை தான் அடிக்கடி சந்தேகம் வரும்..அப்படி வந்தால் எங்க கேட்க்கிறது?இந்த திரட்லயா?இல்ல குறிப்பு இருக்கும் திரட்லயே கேட்டுக்கவா? ஆனால் என்னாலும் உடனே முடியாதுங்க..ஒரு 2,3 நாளில் சமைத்திட்டு சொல்கிறேன்..நீங்க ஆரம்பித்த இந்த திரட் ரொம்ப நல்லாயிருக்குங்க...இப்படி பண்ணினால் எனக்கு நிறைய சமைக்க தெரிஞ்சுடும்...

மேலும் சில பதிவுகள்