சமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்!!!!

அன்புத் தோழிகளே....

எனக்கொரு நீண்ட ஆசை நெடுநாளாகவே மனதில் இருக்கிறது, நேரமின்மையால் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எப்படியும் ஆரம்பித்திட வேண்டும் என்ற முடிவோடுதான் ஆரம்பிக்கிறேன். தயவு செய்து இதில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், அதிகம் எத்தனையும் செய்யலாம். நாளை புதன் கிழமை ஆரம்பிப்போம், அடுத்த புதன்கிழமை அடுத்தவரின் குறிப்புக்குச் செல்வோம். இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ அதிராவுக்காக இல்லை, ஏதோ எம்மால் முடிந்த ஒரு ஊக்குவிப்புத்தான். முன்பும் இப்படி தொடங்கிப் பின் பாதியில் நின்றுபோனது. இதையாவது எல்லோரும் மனம் வைத்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். நாளை ஆரம்பமாவது ஜலீலாக்காவின் குறிப்புக்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

மேனகா!!
நீங்க செய்வதற்கு ஒத்துக்கொண்டதே... பெரிய விஷயம். ஏதோ முடிகிறபோது எதையாவது தேடிச் செய்யுங்கோ... மிக்க நன்றி....

எங்கேயப்பா மற்ற எல்லோரும் வாங்கோ கலந்துகொள்ளுங்கோ.... அன்பான அழைப்பிதழ்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா நலமா?என்னப்பா ரொம்ப நாள் ஆகவும் என்னை மறந்திட்டிங்க போல என் பேர விட்டுட்டிங்க.உங்க பேச்சு கா.. போங்க
அன்புடன் பிரதீபா

ஐயோ பிரதீபா!!!
நீங்க கா சொன்னாலும் நான் பழம்தான். இப்போதான் அங்கே பதிவு போட்டேன் உங்களுக்கு, மன்னித்துக்கொள்ளுங்கோ. உங்களைத்தான் நீண்ட நாளாகக் காணவில்லையே... வந்து கலக்குங்கோ.... ஒருவேளை என்னில் ஏதும் கோபமோ என்றுகூட நினைத்தேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா மேல கோபம் தான் இவ்வளவு நாள் பழகிட்டு பக்கத்தில் இருக்க என்னை மறந்துவிட்டு மற்றவர்களை எல்லாம் கூப்பிட்ட கோபம்

அதிரா!!!
நான் தான்... இருங்க... ஒரு மீன் ரெசிபி ஒரு சுட்டு மசித்த கத்திரிக்காய் ரெசிபி இன்னமும் பின்னூட்டம் அனுப்பலை.. எனக்கு ஒரே பிரச்சனை .. வீட்ட்டில அரிசி இல்லை.. வாங்குவதாகவும் இல்லை... வெரும் பிரியானி இல்லை ப்ரைட் ரைஸ் செய்ய சொன்னால் செய்யமாட்டேன் ஒகேவா... மத்த கறி காய் எதுனாலும் ஓக்கே...
"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஐயையோ இப்படி மாட்டிவிட்டேனே!!!
பிரதீபா.... இந்தாங்க நல்ல பொலித்தீன் பை, இதில் கோபத்தைப் போடுங்கோ கட்டி வைப்பம்... சமையலை அசத்துவோம்... அடுத்த தலைப்பில் உங்களுக்குதான் முதலிடம் ஓகேயா? பக்கத்திலிருந்து அதிராவை நீங்கள் மறக்கவேண்டாம்... கை கொடுங்கப்பா... ஆ... சிரிச்சுக் கேட்குது.

இலா... அதுதானே பார்த்தேன் , ஏன் இன்னமும் தரிசனம் கிடைக்கவில்லை என நினைத்தேன் தாமதித்தால் மெயில் அனுப்பலாம் எனவும் யோசனை, ஏனெனில் போன தடவை இப்படி ஒரு தலைப்பு 100 குறிப்புகள் என நீங்கதானே ஆரம்பித்தீங்க, அதனால் இங்கே நிட்சயம் வருவீங்க எனத் தெரியும்... வந்தாலும் வந்தீங்க ஒரு பத்துக் குறிப்பாவது செய்யலாமே... சரி முறைக்காதீங்கோ ஏதோ இயன்றது செய்வோம்... அதென்ன ஒரே அரிசிப் பிரச்சனை உங்களுக்கு... வெள்ளை நிற அரிசி எதையும் சமைப்பதில்லையா? அதுதான் தாராளமாகக் கிடைக்கிறதே... எங்கள் வீட்டில் வெள்ளை மட்டும்தான் இறங்கும்... எந்தக் குறிப்பாயினும் உங்கள் விருப்பப்படி ஜலீலாக்காவின் குறிப்புக்களிலிருந்து செய்யுங்கோ......
மேலே உள்ள முளுப்பதிவையும் வாசித்தால் எல்லா விளக்கமும் கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா... எங்கடா நம்மை யாரும் சேத்துக்கலயேன்னு நினைச்சேன்.... சேத்துடீங்க. :) நன்றி. நான் சமையலில் கத்துகுட்டி தான்.... அதனால புதுசு புதுசா செய்து பாக்க ஆசை. நிச்சயம் செய்துவிட்டு சொல்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு ஜலீலா மேடம் குறிப்புல இன்னைக்கு ரொம்ப சிம்பிளா புட்டு செய்தேன்..நல்லா வந்தது..அதிரா இன்னும் டிரை பண்ணுகிறேன்..அப்பப்போ பதிவு போடுகிறேன்..ஜலீலா அக்கா குறிப்புல தேங்ஸ்னு பதிவு போட்டுட்டேன்..இப்போ அதிராவுக்கும்,ஜலீலா அக்காவுக்கும் தேங்ஸ்..

அதிராக்கா, நான் இன்று ப்ரன்ச்க்கு (breakfast and lunch become brench) தயி சாதம் செய்தேன். அந்த கதை அதுக்கு கீழ இருக்கு.

இப்படிக்கு
இந்திரா

indira

அதிரா..! நேற்றிலிருந்து நம்ம ஜலீலாவின் குறிப்புகளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். சைவமாக இருந்தால் பரவாயில்லை என்று தேர்வு செய்துகொண்டு இருக்கிறேன். இன்றைக்கு சமைத்துவிட்டு பிறகு சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்