சமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்!!!!

அன்புத் தோழிகளே....

எனக்கொரு நீண்ட ஆசை நெடுநாளாகவே மனதில் இருக்கிறது, நேரமின்மையால் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இன்று எப்படியும் ஆரம்பித்திட வேண்டும் என்ற முடிவோடுதான் ஆரம்பிக்கிறேன். தயவு செய்து இதில் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், அதிகம் எத்தனையும் செய்யலாம். நாளை புதன் கிழமை ஆரம்பிப்போம், அடுத்த புதன்கிழமை அடுத்தவரின் குறிப்புக்குச் செல்வோம். இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ அதிராவுக்காக இல்லை, ஏதோ எம்மால் முடிந்த ஒரு ஊக்குவிப்புத்தான். முன்பும் இப்படி தொடங்கிப் பின் பாதியில் நின்றுபோனது. இதையாவது எல்லோரும் மனம் வைத்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். நாளை ஆரம்பமாவது ஜலீலாக்காவின் குறிப்புக்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

ஜலீலக்கா நீங்க ஒரு முறை ஓட்ஸை உப்பு சேர்த்த்ய் காய்ச்சி மோர் கலந்து சாப்பிடலாம்னு சொன்னீங்களே அதை அடிக்கடி செய்து சாப்பிடுறேன்..சூப்பர் ஐடியா.
அந்த குறிப்பின் கீழ் பிறகு பின்னூட்டம் ப்டுகிறேன் தேடினேன் கிடைக்கலை அன்று

ஹாய் அதிரா தங்களுடைய முயற்சி மிக நல்லது. நான் சாம்பார்,ரசப்பொடி தேடுகையில் ஜலீலாவின் குறிப்பை பார்த்துத்தான் செய்தேன்.ரெம்பவும் ஈசி. அதை இப்பவும் செய்கிறேன். நேரம் கிடைத்தால் இன்று வேறு ஒரு குறிப்பு செய்து நாளை பின்னூட்டம் எழுதுகிறேன். மகனின் பரீட்சையால் நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. அதனால் என்வரவு மிக குறைவு. என்னையும் அதிகம் தெரியவில்லை உங்களுக்கு.அன்புடன் அம்முலு.

நானும் இந்த த்ரெடில் கலந்துக்கொள்கிறேன். இதற்கு எப்படி பின்னூட்டம் அனுப்புவது என்று தெரியல. கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்(ஏனென்றால் நான் இதற்கு புதுசு)

ஜலீலா எப்படி இருக்கீங்க? ஐநூறு குறிப்பு கொடுத்து அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். லேட்டாக சொல்கிறேன் என தப்பாக நினைக்கவேண்டாம். ஏற்கனவே உங்களிடம் அடை கேட்டேனே ஞாபகம் இருக்கிறதா?. ஸோ நான் கட்டாயமாக செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். ஆனால் இப்பொழுது ஒரு உதவி ரவை இட்லி பூப்போல வர என்ன செய்யலாம். தயவுசெய்து குறிப்பு தருவீர்களா?. நன்றி.அன்புடன் அம்முலு.

ஜலீலா எப்படி இருக்கீங்க? ஐநூறு குறிப்பு கொடுத்து அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். லேட்டாக சொல்கிறேன் என தப்பாக நினைக்கவேண்டாம். ஏற்கனவே உங்களிடம் அடை கேட்டேனே ஞாபகம் இருக்கிறதா?. ஸோ நான் கட்டாயமாக செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். ஆனால் இப்பொழுது ஒரு உதவி ரவை இட்லி பூப்போல வர என்ன செய்யலாம். தயவுசெய்து குறிப்பு தருவீர்களா?. நன்றி.அன்புடன் அம்முலு.

ஹாய் அதிரா,எங்க வீட்டில் இன்று ஜலீலாவின் மீன் குழம்பு தான் செய்தேன்.நல்லா இருந்தது.யாரும் சமைக்கலாமில் அவர்களுக்கு பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.இப்ப ஓகேவா அதிரா.கண்டிப்பா இன்னும் செய்ய முயற்சிக்கிறேன்.எனக்கு அறுசுவை வேறு ஸ்லோவா ஓபனாகுதுபா.அதான் இங்க பதிவு போட லேட்டாயிடுச்சு.ரொம்ப நேரம் எடுத்தாலும் பரவாயில்லை,நெட்வொர்க் எரர் என்றே வருது.

நான் விடுறதில்லையே!எவ்வளவு நேரமானாலும் அந்தந்த பேஜுகளை ஓபன் பண்ணி பார்க்காம போகமாட்டேனே!!!

முதலில் உங்களை எங்கள் அறுசுவை சகோதரிகள் சார்பா இத்தளத்திற்க்கு வரவேற்கிறோம்.இங்கு பின்னூட்டம் அனுப்ப கூடாதுபா.கூட்டாஞ்சோறு பகுதிக்கு போய் பாருங்க.ஜலீலா அவங்களோட 500 குறிப்புகளில் உங்களால் எத்தனை முடிகிறதோ அத்தனையும் இவ்வாரத்திற்க்குள் செய்து பாருங்கள்.நீங்க எந்த குறிப்பு செய்றீங்களோ அந்த குறிப்பின் கிழ்,அந்த ரெசிப்பி எப்படி இருந்துச்சுன்னு ஒரு பின்னூட்டம்(அதான் ஒரு ஊக்க பதிவு)கொடுங்க!இந்த த்ரெட்லையும் என்ன செய்தீங்கன்னு வந்து சொல்லி ஒரு பதிவு போடனும் சரியா!!ஓகேவா இப்ப புரிஞ்சுச்சா!

ஹாய் அதிரா,எப்படியிருக்கீங்க?குட்டீஸ் நலமா?நீங்க கூப்பிட்டு வராமல் இருப்போமா!!!!!உங்களுக்கு மட்டும் மண்டையில் (ஐடியா)கலர் கலரா பல்பு எரியுதே எப்படிபா?நம்மள் மூளைன்ற பார்ட்டை அப்பப்போ(நாட் ஆல் டைம்)காணாம் பண்ணிட்டு தேடுற ரகம்பா.ரியல்லி ஐ அப்ரிஷியேட் யூ பா!!!!
நல்ல ஐடியா.என்னை மாதிரிஆட்களுக்கு(தினமும் அறுசுவையில் அல்லது மற்ற .காம்மில் சமையல் பற்றி பார்த்து டிரை பண்ணி பார்ப்பேன்பா)நம்ம (அறுசுவை அரசி)ஜலீலா மேடத்தின் குறிப்புகளை பார்த்து அதனை பற்றிய பின்னூட்டம் அளிக்க (திருப்பதிலட்டு சாப்பிட)கசக்குமா என்ன? இந்த ஐடியா குடுத்த உங்களுக்குஒரு பாஸ்கின் ராபின்ஸ்வென்னிலா பார்சல்(அதான் தொண்டை சரியாயிடுச்சே)
நீங்க கூப்பிட்டு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா நான் சமைக்கப்போகின்ற ஐயிட்டம்ஸ்:-இப்ப இப்ப போயி ஃபர்ஸ்ட் ஒரு கப் ஏலக்காய் டீ(அதான் உங்க பாஷையில ரீ),இனிப்புல ஆரம்பிக்கணுன்றதாலே மைசூர் பாக்,வெஜிடபுள் குருமா(ghee rice) இம்புட்டுதான்பா.செய்திட்டு பதிவை போட்டுடுறேன்.என் வீட்டு கம்ப்யூட்டர் கனெக்க்ஷென் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுத்து(தி வெப்சைட் இஸ் என்கவுண்ட்டரிங் பிராப்ளம்ஸ் டிஸ்ப்ளே ஆகிடுத்துபா)
Learn more;then you will know how much more you need to learn.

ஆ... கடவுளே...
இத்தனை பதிவுகளா... எனக்கு உடன் பதில் போட நேரமில்லாமல் பண்ணிவிட்டாரே இந்த ஆண்டவன்... நான் வந்து எல்லோருடனும் கதைக்கிறேன்... இப்போ அம்மாவுடன் போனில் கதைக்கும் நேரம் இல்லையென்றால் போனைப் பிடித்தபடியே திரிந்தேன் நீ எடுக்கவில்லை என்று கவலைப்படுவா... அப்படியே பள்ளிக்கூடம் விட்டுவிடும்... எனவே வந்து எல்லோருக்கும் பதில் போடுவேன்... ஆ... எல்லோர் வீட்டிலும் ஜலீலாக்காவின் குறிப்பு வாசனை மூக்கைத் துளைக்கிறதே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று கோதுமை தோசை இரவு டிபனுக்கு செய்தோம். மிளகாய்க்கு பதில் மிளகுப் பொடி சேர்த்தேன். நன்றாக இருந்தது. தொட்டுக்க சிவப்பு மிளகாய், உப்பு, பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்த துவையல், நன்றி, ஜலிலா

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்