உருளைக்கிழங்கு பொரியல்

தேதி: November 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
4. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
5. கடுகு - 1/4 தேக்கரண்டி
6. சீரகம் - 1/4 தேக்கரண்டி
7. உளுந்து - 1/4 தேக்கரண்டி
8. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
9. உப்பு
10. எண்ணெய் - 1 சின்ன குழிக்கரண்டி
11. கொத்தமல்லி, கருவேப்பிலை
12. வெங்காயம் - 1 (நறுக்கியது)


 

உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும் (தோல் நீக்க வேண்டியதில்லை)
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும், பொடி வகைகளை சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
உருளை வெந்ததும் மூடி இல்லாமல் சிறுந்தீயில் 5 நிமிடம் வைத்து கிளறவும்.


தாளித்த தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்றதுக்கு ஏற்றது. விரும்பினால் 4 துண்டு தக்காளி சேர்க்கலாம். காரம் சேர்ப்பவர்கள் இன்னும் சிரிது மிளகாய் தூள் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எங்க போய்ட்டீங்க? நான் இன்று உருளைகிழங்குபொரியல் செய்தேன் தெரியுமா! சூப்பரா இருந்தது.

நிஜமாவா?? :) நன்றி பரிமலா... என் குழந்தை இன்று என்ன கொஞ்சம் பிஸியா ஆக்கிட்டா.... அதான் இந்த பக்கம் வர முடியலங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இன்று நான் உருளைகிழங்கு பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க நன்றி மஹா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தபொரியல் நன்றாக இருந்தது.நான் தோல்சீவிட்டு செஞ்சேன்.ஏன்னா குழந்தைகளுக்கு தோலுடன் போட்டால் சாப்பிடமாட்டார்கள்.

சவுதி செல்வி

மிக்க நன்றி செல்வி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க உருளைப் பொரியல் இன்று செய்தேன்.நல்லாயிருந்தது.

மிக்க நன்றி மேனகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா