ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட் சமையல் குறிப்பு - படங்களுடன் - 9788 | அறுசுவை


ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட்

வழங்கியவர் : shadiqah
தேதி : புதன், 12/11/2008 - 16:49
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
1 vote
Your rating: None

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட். நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்

 

  • பிடித்தமான பழ வகைகள் - ஒரு கிலோ
  • சர்க்கரை - 8 தேக்கரண்டி
  • பால் - ஒரு லிட்டர்
  • கஸ்டர்ட் பவுடர்(வெனிலா ஃப்ளேவர்) - 4 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • பாதாம் - 10
  • பிஸ்தா - ஒரு கைப்பிடி
  • கிஸ்மிஸ் - 2 மேசைக்கரண்டி
  • ஜாம் அல்லது ஜெல்லி - சிறிய கப்
  • மில்க் மெய்ட் - 1/4 கப்

 

ஆப்பிள், ஆரஞ்ச், பேரிக்காய், கொய்யா பழம், பிளம்ஸ், சாத்துக்குடி, வாழைப்பழம், மாதுளம்பழம் இது போன்ற விருப்பமான எல்லா பழவகைகளும் சேர்த்து ஒரு கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.

குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எல்லா பழவகைகளையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

ஒரு லிட்டர் பாலுக்கு 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் விதம் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தாமதித்தால் கட்டி விழுந்துவிடும். பால் கெட்டியான பதமானதும் இறக்கி வைக்கவும்.

பரிமாற போகும் கிண்ணத்தில் நறுக்கின பழக்கலவையை வைக்கவும். அதன் மேல் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.

நட்ஸ் தூவிய பின்னர் மில்க் மெயிட் மற்றும் கஸ்டர்ட் கலவையை பரவலாக ஊற்றவும். அதன் மேல் ஜாம் அல்லது ஜெல்லியை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் எடுத்து பரிமாறவும். சுவையான ப்ரூட்ஸ், நட்ஸ் சாலட் தயார்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..கஸ்டட், ஜெல்லி, புரூட்ஸ்

ஸாதிகா அக்கா ரொம்ப சூப்பர் படமெல்லாம் சேம் என்னுடைய டேஸ்டே தான் உங்களுக்கும்.

இந்த புரூட் சேலடில் நட்ஸ் வகை களை லேசா பட்டரில் வருத்து போட்டால் இன்னும் சுவை கூடும்.
கஸ்டட், ஜெல்லி, புரூட்ஸ் தனித்தனியாக பிரிட்ஜில் வைத்து கொள்ளனும் சாப்பிடும் போது கலந்து கொள்ளனும். உடனே சாப்பிடுவதாக இருந்தால் ஒகே இல்லை என்றால் பழங்கள் கருத்துவிடும்.
ஜலீலா

Jaleelakamal

சாதிகா அக்கா

சூப்பர் பார்த்தவுடன் சுவைக்க தோணுது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஸாதிகா,

GREAT PRESENTATION,very good.கலர்ஃபுல்லா கலக்கிட்டீங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Super..!!

ஸாதிகா மேடம்,

ஸாதிகா மேடம்,
பார்க்க மிகவும் சுவையாக இருக்கு, என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆனால் இதில் மில்க் மெயிட் என்றால் கன்டன்ஸ் மில்க்கா? (condensed Milk)

Keerthisvary

Keerthi

ஃப்ரூட்ஸ் - நட்ஸ் சாலட்

மிக அழகான படஙகள்.சுவையும் சத்தும் அதிகம்.
நன்றி.

ஃபுரூட்ஸ் சாலட்-ஜலீலா

ஆமாம் ஜலீலா,பறிமாறும் போதுதான் சர்விங்பவுலில் பழங்களை போட்ட பின்னர்தான் கஸ்டர்ட் பரவலாக ஊற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கின்றேன்.பழங்கள் கறுத்துப்போகாமல் இருக்க லேசாக லெமன் ஜூஸ் சேர்த்து பழங்களை கலந்து வைக்கலாம்.பின்னூட்டத்திற்கு நன்றி ஜலீ.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஆஸியா-ஃபுரூட்ஸ்சாலட்

நன்றி ஆஸியா உங்கள் பின்னூட்டத்திற்கும் ,பாராட்டுகளுக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கீர்த்திஷ்வரி-ஃபுரூட்ஸ்சாலட்

கீர்த்திஷ்வரி,உங்கள் மகனுக்கு ஃபுரூட்ஸ் சாலட் பிடிக்குமா?பின்னூட்டத்திற்கு நன்றி.மில்க் மெய்ட் என்றால் கண்டன்ஸ் மில்க் தான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஷீபா-ஃபுரூட்ஸ்சாலட்

ஷீபா,(உச்சரிப்பு சரிதானே?)பாராட்டுகளுக்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website