ஈஸி பீஃப் ஃப்ரை

தேதி: November 13, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீஃப் - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன் (காஷ்மீர் சில்லி பவுடர்)
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

கறியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். தண்ணீர் வடிகட்டவும்.
கறியுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, தயிர், சில்லி பவுடர் சேர்த்து கால் மணி நேரம் குக்கரிலேயே ஊறவைக்கவும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து மூடி ஐந்து விசில் வைக்கவும்.
ஆவி அடங்கிய பின் திறந்து, தண்ணீர் இருந்தால் வற்ற விடவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு, குக் செய்த கறியை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதிக பொருட்கள் சேர்க்காமல் செய்த பீஃப் ஃப்ரை ரெடி.


இது எல்லாவகை சாதத்திற்கும் பொருந்தும். தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்