சுர்ரோஸ்

தேதி: November 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 100 கிராம்
தண்ணீர் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
ஐஸிங் சர்க்கரை மேலே தூவுவதற்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க வைத்து மாவில் விட்டு ஒரு மரக்கரண்டியால் கிண்டவும்.
பின்பு அதை கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.
இந்த மாவு கலவையை முறுக்கு உரலில் போட்டு இதற்கு ஸ்டார் அச்சு அதுவும் ஸ்டார் பெரிய அளவில் இருக்கும் படியான அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழியவும் 8 அங்குல அளவில் பிழிந்து பின்பு அதை கத்தியால் வெட்டி விடவும்.
மிதமான தீயில் வெந்தவுடன் எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து அதன் மேல் ஐஸிங் சர்க்கரை தூவவும் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இது ப்ரான்ஸில் பிரசித்தமான ஒரு பதார்த்தம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொது மக்கள் கூடும் திருவிழா மற்றும் சந்தை போன்ற இடங்களில் சூடாக செய்து ஒரு கொரணையில் போட்டு தருவார்கள் ரொம்பவும் சுவையாக இருக்கும் செய்வது சுலபம். இதற்கு இங்கு சாக்லேட் பேஸ்ட்டும்(nutella)தொட்டு சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்க சொல்றத பார்த்தா இங்க ஒரு ஃப்ன்னல் கேக் ( Funnel Cake) என்று கிடைக்கும்... சொல்வது போல் ஃபேர் மற்றும் நேவி பியர் ( சிகாகோவில் சாப்பிடது) போன்ற இடங்களில் கிடைக்கும்

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நண்பி ரஸியா சுர்ரோஸ் பெயரை ஒருமுறை பிரெஞ்சில் எழுதிக்காட்டுவீங்களா S.V.P?

எப்படி இருக்கீங்க?இதன் செய்முறை படம் எடுத்து அட்மினுக்கு அனுப்பி உள்ளேன் கூடிய விரைவில் படத்துடன் அருசுவைய்யில் வரும் என நினைக்கிறேன்

இதன் பெயர் churrosஎன்றும் chichisஎன்றும் அழைக்கப்படுகிறது

ரஸியா ரொம்ப நன்றி.சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது இவ்வளவு ஈசி என்று தெரியாது குறிப்பிற்கு நன்றி.10 நிமிடமும் இல்லை செய்து முடித்துவிட்டேன்.இனிமேல் கணனியில் இருக்கும்போது ிடையில் போய் செயதுகொண்டு ஓடிவந்து நொறுக்குவதற்கு சுலபமாக இருக்கும்.மிக்க நன்றி.
சுரேஜினி

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு
மேலும் இது செய்வது ரொம்பவும் எளிது,குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் இது பிடிக்கும்!நீங்கள் ப்ரான்ஸில் எங்கு இருந்தீர்கள்?இப்பொழுது கனடாவிர்க்கு போய்விட்டீர்களா?விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்!நாங்கள் வசிப்பது செர்ஜியில்! பக்கத்தில் வருடத்திர்க்கு ஒரு முறை
foire saint martin வரும் (இது ஒரு திருவிழா மாதிரி இரண்டுவாரம் )இதை வாங்கி சாப்பிடவும் சர்டின் வாங்கி சாப்பிடவும் இங்கு ஒரு கூட்டமே செல்லும்!அப்புறம் இந்த குறிப்பு யாரும் சமைக்கலாமில் இன்று உள்ளது போய் பாருங்கள்
மீண்டும் நன்றி சுரேஜினி

வணக்கம், உங்களின் இந்தக் குறிப்பு செய்வதற்கு மிகவும் இலகுவாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் உள்ளது. நான் இதுவரை இரண்டு தடவைகள் செய்து சுவைத்தேன். நன்றி.

வணக்கம்,உங்கள் பின்னோட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,மிக்க நன்றி!ஆம் இது செய்வது ரொம்பவும் சுலபம் இது நல்ல மணமாகவும் கிரிஷ்ப்பியாகவும் இருக்கும் இனி அடிக்கடி செய்யுங்க!

ரொம்ப ரொம்ப ஈஸியான செய்முறை.பலதடவை செய்துவிட்டேன்.நன்றி உங்களுக்கு!!

உண்மைதான் மேனகா,ரொம்ப சுலபம் சாப்பிட ரொம்பவே டேஸ்ட்,எல்லோறும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!

really your dish surrose is very nice . my son loves very much this surrose . also it is easy to make so I really enjoy this

அன்பு சகோதரி,
சுர்ரோஸ் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி!நான் ரொம்ப நாட்க்களுக்கு பின்பு இப்பொழுது தான் லாகின் செய்தேன் உங்கள் பின்னூடம் இப்பொழுது தான் பார்க்க முடிந்தது!உங்கள் பிள்ளைக்கு பிடித்தது ரொம்ப சந்தோஷம்!
இது பிள்ளைகளுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!!!