தேங்காய்ப்பால் வெள்ளை பூசணி குழம்பு

தேதி: November 14, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை பூசணி 1/2
தேங்காய்ப்பால் 2 கப்
பெரிய வெங்காயம் 1
இஞ்சி சிறிது
மிளகாய்த்தூள் 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2 (அ) 3
கருவேப்பிலை,கொத்துமல்லி
கடுகு 1/4 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு


 

வெங்காயத்தையும் இஞ்சியும் நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.
பூசணியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
பூசணி,வெங்காயம்,இஞ்சி,மிளகாய்த்தூள்,தனியா தூள்,கருவேப்பிலையை சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.
பச்சை மிளகாய் சேர்க்கவும்.இதில் ஊறிய கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி பூசணியை வேக விடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்
காய் வேந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.


தேங்காய்ப்பால் கொதிக்க கூடாது.
இந்த குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குழம்பில் புளிப்பு சுவைக்காக தக்காளி சேர்க்கலாமா? சொல்லுங்களேன் please...

தக்காளி சேர்க்கலாம்

Meet u with an another Receipe

இவ்ளோநாள் எங்கப்பா போனீங்க இப்பவாவது பதில் சொல்லிட்டீங்களே thanks