கர்ப்பகாலத்தில் தூக்கம்

அன்பு தோழிகளே
இப்பொழுது எனக்கு 6 மாதம் ஆகிறது. இரவில் தூக்கமே வருவதில்லை. அவஸ்தையாக உள்ளது. பகலில் சிலநேரம் தூங்குகிறேன் 1 மணி நேரம்போல. இரவில் நார்மலாக தூங்க என்ன செய்வது என்று கூறுங்கள். நெஞ்சுகரிப்பும் அதிகமாக உள்ளது.
ஜீவாகிருஷ்ணன்

அன்பு ஜீவா,
முதலில் தாயாகப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அப்படித்தான்ப்பா, மாசம் ஆக ஆக இரவில் தூக்கம் சரியாக வராது. இரவில் சாப்பாடு கொஞ்ச நேரமே சாப்பிட்டுவிடணும்.
ஒருமணி நேரம் கழித்து வெந்நீர் ஓரளவு சூடாக இடுப்பில் இருந்து ஊற்றிக் கொண்டு படுத்தால் தூக்கம் வரும்.
எண்ணெய் பதார்த்தம் அதிகம் சாப்பிட வேண்டாம்.
சீரக கஷஅயம் குடித்தால் நெஞ்சு கரிப்பு குறையும். தூக்கமும் வரும். நாளை என்னுடைய குறிப்பில் சேர்க்கிறேன்.
திரும்பி படுக்கும் போது எழுந்து திரும்பி படுக்கவும். அப்படியே திரும்பக் கூடாது.
இன்னும் யோசித்து நாளை சொல்கிறேன்.
வெந்நீர் ஊற்றினாலே நல்ல பலன் கிடைக்கும். முயற்சி செய்து பாரும்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேம் எத்தனை மாதத்திலிருந்து திரும்பி படுக்கும் போது எழுந்து திரும்பி படுக்க வேண்டும். அல்லது ஆரம்பத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லதா?

அன்பு சுரேஜினி,
நலமா? உங்களை(எழுத்துக்களை)யெல்லாம் அறுசுவையில் பார்ப்பேன். என் உடல்நிலை காரணமாக, என்னால் யாருடனும் அதிகம் பேச முடியவில்லை. அப்பறம் மேம் எல்லாம் வேண்டாம்.

ஆறாவது மாதத்தில் இருந்து எழுந்து திரும்பி படுக்க வேண்டும். மல்லாந்து படுக்கக் கூடாது. மூச்சுவிட கஷ்டமாகிடும். பெரியவர்கள் சொல்லும் போது கஷ்டமாக தெரியும். நான் முதல் குழந்தைக்கு அப்படித்தான். எழும்பாமல் திரும்பிப் படுப்பேன். கடைசியில் மாலை சுற்றிக் கொண்டு டெலிவரி சிக்கலாகி விட்டது. அதனால் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்த்தால் நமக்குதான் சிரமம். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேட்கவும். வாழ்த்துக்கள் சுரேஜினி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உடம்புக்கு முடியாத நேரத்திலும் எனக்கு பதில் தந்ததற்கு மிக்க நன்றி.உங்கள் நல்ல மனதுக்காக நானும் பி்ரார்த்திக்கிறேன்
சுரேஜினி

நீங்கள் கூறியது போல வெந்நீர் ஊற்றி பார்க்கிறேன். என் பாட்டி கூட அதைதான் கூறினார்கள். சீரக தண்ணீர் 6 மாதத்திலேயே குடிக்கலாமா? 7 பிறக்கப்போகிறது. உங்கள் குறிப்பு எங்கு உள்ளது? லிங் தாருங்கள்
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

அன்பு ஜீவா,
சீரக கஷாயம் 6 மாசத்திலேயே குடிக்கலாம். தப்பில்ல. குறிப்பு நாளைக்கு தர்றேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா
குறிப்பு தரேன் தரேன் சொன்னீர்கள் இன்னும் தரலியே.. அல்லது வேறு எங்கும் எழுதி உள்ளீர்களா?தெரியப்படுத்தவும்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

அன்பு ஜீவா,
சாரிடா, உடல்நிலை சரியில்லாம உடனே கொடுக்க முடியலை. இன்னிக்கு கண்டிப்பா தந்திடறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்