ரிச் பராசப்பம்

தேதி: November 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி உடைந்த பாஸ்மதி - அரை படி
தேங்காய்பால் டின் - 400 மி.லி
முட்டை - 4
நாட்டு வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோறு - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஆப்ப சோடா - 2 சிட்டிகை


 

முதல் நாளே மாவு தயாரிக்க வேண்டும். அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிகட்டவும். அதில் சோறுரை பிசறி வைக்கவும் மிக்ஸியில் வெங்காயத்தை உரித்து போட்டு அதில் பெருஞ்சீரகத்தை போட்டு மையாக அரைக்கவும்.
மேலும் கிரைண்டரில் மாவு கலவை, அரைத்த வெங்காயம் தேங்காய்பால் விட்டு நன்றாக நைசாக அரைக்கவும்.
இந்த மாவு இட்லி மாவைவிட சற்று கெட்டியாக இருக்கும் அதில் உப்பு சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்
மறுநாள் முட்டையை நன்றாக கலக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும். பிறகு ஆப்ப சட்டியில் ஒரு குழிக்கரண்டி மாவைவிட்டு அடைபோல் ஊற்றவும்.
இந்த ஆப்பம் மெல்லிதாக இருக்க கூடாது. மேலே ஒரு மூடியை வைத்து மூடவும். பாதி வெந்து இருக்கும் நிலையில் ஒரு கரண்டி நெய் சுற்றினால் போல்விட்டு திருப்பி போடவும். வெந்த பின்பு எடுக்கவும்.
இதற்கு கோழிக்குழம்பு, குருமா தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.


இது இஸ்லாமிய இல்லங்களில் பண்டிகை காலங்களில் செய்யப்படுவது சுவையான ஆப்பம். மறுநாள் மாவு புளிக்கவில்லை என்றால் ஒரு சிட்டிகை சோடா உப்பு கலந்து சுடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் ரஸியா எப்படி இருக்கீங்க
எஙக் வீட்டில்லும் இந்த ரிச் பராசாப்பம் ஒரு சூப்பர் ஹிட்
ஆனால் நீங்கள் (சோறும், சோம்பும் சேர்க்கிறீர்கள்) நாங்கள் தேங்காய் பால் கீமாவில் செய்வோம். உங்கள் முறையையும் செய்து பார்க்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நான் நல்லா இருக்கேன் அக்கா
நீங்க எப்படி இருக்கிங்க?உங்கள் வீட்டிலும் இந்த ஆப்பம் பிடிக்குமா!எங்கள் வீட்டிலும் ரொம்ப பிடிக்கும் என்ன தேங்காய்ப்பாலிலேயே அரைப்பதால் இது கொஞ்சம் ரிச்சாயிடுது அதனால் அடிக்கடி செய்வது ஆகாது, எங்கள் வீட்டு செய்முறைய்யை ஒருமுறை செய்து பாருங்கள் அக்கா சோம்பு வெங்காயம் சேர்ப்பது வாசனைக்காக !செய்து பார்ப்பதாக சொன்னதர்க்கு மிக்க நன்றி அக்கா!

உங்கள் முறைப்படி செய்தேன்.இது ஆப்பம் மாதிரி நல்ல வந்தது.நாங்கள்
ஆனால் இத்துடன்,கீமா,பாசிப்பருப்பு,மசாலா,இஞ்சி பூண்டும் சேர்த்து செய்வோம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனது முறைப்படி இந்த பராசப்பம் செய்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு நன்றி!நானும் ஒரு முறை உங்கள் முறை செய்து பார்க்கிறேன்!எங்கள் ஊர் பக்கம் இப்படி தான் செய்வார்கள்!