உருளை வறுவல்

தேதி: November 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரை கிலோ
கடுகு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சாம்பார்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப


 

உருளையை தோல் சீவி ஒரு அங்குல துண்டங்களாக வெட்டி கழுவி வைக்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெயில் விட்டு சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, சாம்பார்பொடி போடவும்.
சாம்பார்பொடி தீயாமல் சிவந்தவுடன் அதில் நறுக்கி வைத்து இருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு 2 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு மிதமான தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
சிறிது நேரத்திற்கு ஒருமுறை அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். தீயை குறைத்து முறுகலாக வேகவிடவும். வெந்த பின்பு சாம்பார்சாதம், ரச சாதத்துடன் சாப்பிட சுவை அபாரம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா இக் குறிப்பின்படி வருவல் செய்தேன். நல்லா ரோஸ்டா நன்றாக இருந்தது.நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் மிகவும் ஈஸியா இருக்கு. நன்றி.

தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிதமான தீயில் செய்வதால் நல்ல முறுவலாம வரும் அதுவும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்வதால் எண்ணைய்யும் குறைவாக பயன்படுத்தலாம்.செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி அக்கா!

ரொம்ப ஈஸியான வறுவல்,அதுவும் சாம்பார் பொடி போட்டு வறுத்தது இதான் முதல் முறை.ரொம்ப நல்லாயிருந்தது அக்கா!!

இதே உருளையை அவித்துவிட்டு கூட துண்டங்கள் செய்து பொரிக்கலாம் அதுவும் நல்லா இருக்கும்!

ரஸியா

இந்த உருளை வறுவல் செய்வதற்கு எளிதாகவும் சாம்பார் பொடி மணத்துடன் சுவையாகவும் இருந்தது... நன்றி...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ரஸியா, உருளை வறுவல் செய்தேன் மிகவும் அருமையாக வந்தது. நான் சாம்பார் தூள் போடவில்லை(என்னிடம் அப்படியொரு தூள் இல்லை) கறித்தூள்தான் சேர்த்தேன். மிக்க நன்றி குறிப்பிற்கு. ஏன் இடையில் நிறுத்திவிட்டீங்கள் தொடர்ந்து குறிப்புக்கள் கொடுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உருளை வருவல் நல்லா வந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி!கறித்தூளூம் சேர்க்கலாம் எல்லா ஒரே மசாலாதான்.அத்தோடு சிறிது பெருங்காயம் சேர்த்து பாருங்க சுவை டாப்பா இருக்கும்!எனக்கு நேரம் சரியா இருக்குப்பா,அதனால் தான் என்னால் குரிப்ப்களை எழுத முடியவில்லைமேலும் சில குறிப்புகள் படம் எடுத்துவைத்தேன் அதைக்கூட அனுப்ப இயலவில்லை,பார்ப்போம் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் குறிப்புகளை அனுப்புவேன்!

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த உருளை வறுவலின் படம்

<img src="files/pictures/aa269.jpg" alt="picture" />

நீங்கள் செய்த உருளைவருவல் பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது~! மிக்க நன்றி அதிரா!படத்தை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!