பீர்க்கங்காய் தீயல்

தேதி: November 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
முட்டை - ஒன்று
இறால் - 10
அரைத்த தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு


 

பீர்க்கங்காயை தோல் சீவி நடுவே கீறி அரைவட்ட துண்டுகளாக மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக சதுரமாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாகில் கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப்போட்டு ப்ரவுன் நிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு பச்சைமிளகாய், கழுவி வைத்துள்ள இறால் போட்டு வதக்கவும். மேலும் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் நறுக்கிய காயை போட்டு வதக்கவும்.
பிறகு அரை டம்ளர் தண்ணீர் விட்டு மசாலா பொருட்கள், தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். பிறகு காய் வெந்ததும் முட்டையை கலக்கி அதில் பரவினாற் போல் ஊற்றவும். முட்டை வெந்தபின்பு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ரசியா நலமா?
இந்த ரெசிப்பி செய்தேன்.மிகவும் டேஸ்ட்டாக இருந்தது.காய்யும் தன்னி விடுவதால் ,தேங்காய் பால் ஊற்றுவதால் நான் தண்ணீர் ஊற்றவில்லை.அதிலேயே வெந்து விட்டது.இது கிரேவி போல இருக்குமா என்று தெரியவில்லை.நான் பிரட்டினாற் போல் வைத்தேன்.சுவையாக இருந்தது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

நான் நல்லா இருக்கேன்,நீங்க எப்படி இருக்கீங்க?ரொம்ப..ரொம்ப நா..ளாச்சு உங்களுடன் பேசி!உங்கள் பின்னூட்டம் பார்த்து ரொம்ப...ரொம்ப சந்தோசம்!உங்களுக்கு இந்த ரெஸிப்பி பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்!நான் தேங்காய் அரைத்து கரைப்பதால் சிறிது நீர் சேர்ப்பேன்,நீங்கள் தேங்கய்ப்பால் விடும்போது தண்ணீர் அவசியம் இல்லை!இது பிரட்டினார்ப்போல் தான் இருக்கும் நீங்கள் சரியாக தான் செய்துள்ளீர்கள்!பாராட்டுக்கள்!அத்தோடு உங்கள் அன்பான பின்னோட்டத்திர்க்கு நன்றிகள் பல....பல!

பீர்க்கங்காய் தீயல் மிகவும் அருமை. நல்ல பிரட்டினாற் போல் வைத்தேன். சப்பாத்திக்கு, டூனாவும், தீயலும் சூப்பராக இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த தீயல்.சப்பாதிக்கும் நல்லா இருக்கும்!ரொம்ப நன்றி தனிஷா!உங்கள் பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கிறது!