மீன் ரோஸ்ட்

தேதி: November 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாறை மீன் - 6
வெங்காயம் - 2
தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
தக்காளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி அல்லது எலுமிச்சை - ஒன்று
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மீனில் பிரட்டுவதற்கு:
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (பொரிப்பதற்கு)


 

மீனைகழுவி சுத்தம் செய்து உப்பு போட்டு பிசறி கழுவிக்கொள்ளவும். தலைப்பாகத்தை நீக்கிவிடலாம். பின்பு கத்தியால் மீனை இரண்டு புறமும் 4 இடங்களில் கீறிவிடவும்.
பின்பு மீனில் பிரட்டுவதற்கு கொடுக்கபட்ட பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு பிசறி 1/2 மணி நேரம் வைக்கவும்.
பின்பு ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு மீனை லேசாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். ரொம்பவும் முறுகலாக பொரிக்க கூடாது. வெங்காயத்தை மெலிதாக நீளவாகில் நறுக்கவும்.
தக்காளி பச்சைமிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பின்பு வேறொரு வாயகன்ற நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கி மிளகாய்தூள் போட்டு வதக்கியபின்பு அதில் இஞ்சி பூண்டு விழுதைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி பேஸ்ட் போட்டு வதக்கிய பின்பு அதில் ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் விட வேண்டும்.
மேலும் அனைத்து மசாலா பொருட்கள் உப்பு, வினிகர் எல்லாவற்றையும் சேர்த்து அதில் பொரித்து வைத்துள்ள மீனை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
ஒருபுறம் வெந்தபின்பு மறுபுறம் திருப்பி போடவும். மசாலா திரண்டு எண்ணெய் விட்டு முறுகி வரும் தருவாயில் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்