பீர்க்கங்காய் பருப்பு

தேதி: November 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைக்க - 1
பீர்க்கங்காய் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வேக வைக்க - 2
துவரம் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு பற்கள் (நன்றாக தட்டியது)
வெங்காயம் - அரை (பொடியாக அரிந்தது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது


 

பீர்க்கங்காயை தோலெடுத்து பொடியாக அரிந்து அதில் வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து போடவும். அதில் பச்சை மிளகாய் இரண்டாக ஒடித்து போட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.
பருப்பை நன்கு களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து அதில் மஞ்சள் பொடி, சீரகம், வெங்காயம் போட்டு வேகவைத்து ஆறியதும் கரண்டியால் மசித்து கொள்ளவும்.
வெந்த காயையும், மசித்த பருப்பையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டி கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா நான் இன்று பீர்க்கங்காய் பருப்பு பன்னினேன்.ரொம்ப நல்லா இருந்தது.இதர்கு கடலைப்பருப்பு போடலாமா?இன்னைக்கு இரவு இங்ஜி ரஸம் வைக்கப்போரேன் கண்டிப்பாக.

ஜலீலா, பீர்க்கங்காய்க்கு பதில் வெள்ளரிக்காய் போட்டு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

நேற்று கருணைகிழங்கு வடை, பீர்க்கங்காய் பருப்பு, தக்காளி முட்டை ஆம்லேட் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.thank you very much.ஜலீலா,&அதிரா

அன்பு தோழிகளே,

ஜலீலா அக்கா உங்களுடைய குறிப்பில் பீர்க்கங்காய் பருப்பு மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"