மைதா முறுக்கு

தேதி: November 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 500 கிராம்
பட்டர் - 50 கிராம்
எண்ணெய் - தேவைக்கு
கருப்பு எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு


 

மைதாவை சலித்து, ஒரு துணியில் மூட்டை கட்டி, நீர் படாமல் ஆவியில் நன்கு வேக செய்யவும்.
நன்கு ஆறியதும், ஸ்பூனால் கட்டி இல்லாமல் உதிர்த்துக்கொள்ளவும்.
இதில் உப்பு, பட்டர், எள், பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் கலந்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.
இதனை தேன் குழல் அச்சில் முறுக்குகளாக செய்யவும்.
சாதரணமாக அரிசிமாவில் செய்யும் முறுக்கை விட இந்த முறுக்கு பளிச் என்ற வெண்மையுடன் அதிகமான மிருதுவுடன், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.


எள்ளுக்கு பதிலாக சீரகம், ஓமம் சேர்க்கலாம். சாதாரணமாக முறுக்கை நேரடியாக எண்ணெயில் பிழிவோம். சிலர் ஒரு தட்டில் நிறைய பிழிந்து ஒவ்வொன்றாக கையால் எடுத்து எண்ணெயில் போடுவார்கள். ஒரு தோசை திருப்பியில் முறுக்கை ஒவ்வொன்றாக பிழிந்து கை படாமலேயே எண்ணெய் சட்டியில் விட்டால் முறுக்கு பார்க்க அழகான நல்ல ஷேப் கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சாதிகா அக்காஅஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா
உங்களுடன் இதுதான் முதல் முறை பேசுகிறேன் உங்கள் மைதா முறுக்கு செய்தேன் நன்றாக இருந்தது தேங்காய் பால் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

அன்புடன்
நஸ்ரின் கனி