டபுள் பீன்ஸ் குருமா

தேதி: November 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

டபுள் பீன்ஸ் - 100 கிராம் பச்சை
பட்டாணி - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - சிறிது
சீரகப்பொடி - சிறிது
பட்டை - 1 துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 3
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்


 

டபுள்பீன்ஸ், பச்சைபட்டாணி உலர்ந்ததாக இருந்தால் இதில் பாதி அளவே எடுத்து இரவு ஊற வைக்கவும். ஃப்ரெஷ் ஆக இருந்தால் தேவை இல்லை.
குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, ஏலம், கிராம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
தேங்காயை வேர்க்கடலையை நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வதங்கிய கலவையில் டபுள்பீன்ஸ்,பட்டாணியுடன்,அரைத்த தேங்காய் விழுது மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
உப்பு, மசாலா பொடிகள் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக செய்யவும்.
இறுதியில் நறுக்கிய மல்லி, பட்டர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சப்பாத்தி, பரோட்டா, நாண், குல்சா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hello madam, ungalin intha dauble beans kuruma seivatharku elithagavum suvaum arumayaga erunthathu. Indru engalin breakfast sappathium intha kurumavum seithen valakatthai Vida ennavar oru sappathi kooduthalagave sappitar ungalin intha kuripirku migavum nandry.

இந்த வாரம் பார்த்து நாங்கள் வாங்கும் கடையில் பிரெஷ் டபுள் பீன்ஸ் கிடைத்தது - உடனே வாங்கி வந்தேன். இந்த குருமா செய்வதற்கு எளிதாகவும், சுவையாகவும் இருந்தது .... நன்றி ஸாதிகா

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சந்தனா.
ஸாதிகா

arusuvai is a wonderful website