வெஜ் பிட்ஸா ப்ரெட்

தேதி: November 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஸ்மால் ப்ரெட் - ஒரு பாக்கெட் (10 ஸ்லைஸ்கள்)
பிட்ஸா சாஸ் - 5 தேக்கரண்டி
மொஜெரெல்லா சீஸ் - ஐந்து மேசைக்கரண்டி
ஆலிவ் காய் - ஐந்து
டொமேட்டோ கெட்சப் - ஐந்து தேக்கரண்டி
பட்டர் - 10 தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
குடைமிளகாய் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
பட்டர் + எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி


 

வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
ப்ரெட்டில் சிறிது பட்டரை தடவி தோசைக்கல்லில் போட்டு கருக விடாமல் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை அணைத்து விட்டு பத்து ப்ரெட் ஸ்லைஸ்களின் ஐந்தில் மட்டும் பிட்ஸா சாஸை பரவலாக தடவி விடவும்.
பிறகு வதக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றும் ஆலிவ் காயை நறுக்கி போட்டு ப்ரெட் கொள்ளும் அளவிற்கு நிரப்பி வைக்கவும்.
அதன் பின்னர் மொஜெரெல்லா சீஸை தூவவும். ப்ரெட் முழுவதும் தூவினால் ஒன்றொடொன்று சேர்ந்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.
சீஸ் தூவிய பின்னர் கடைசியாக டொமேட்டோ கெட்சப்பை மேலே ஊற்றவும்.
அதன் மேல் டோஸ்ட் செய்து வைத்திருக்கும் ஐந்து ப்ரெட்டை ஒவ்வொன்றின் மேலும் வைத்து அழுத்தி விடவும்.
இப்போது செய்து வைத்திருக்கும் ப்ரெட் ஸ்லைஸ்களை அவனில் 2 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
யம்மி வெஜிடபுள் பிட்ஸா ப்ரெட் ரெடி. அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இதை ப்ரெட், சிறிய அளவிலான பன், பெரிய அளவிலான பன், ரவுண்டு பன் எல்லாவற்றிலும் செய்யலாம். மில்க் ப்ரெட் என்றால் இன்னும் சுவை கூடும். ப்ரெட்டை பொரிக்காமலும் செய்யலாம். குழந்தைகள் க்ரிஸ்பியாக இருப்பதையே விரும்புவார்கள் ஆகையால் பட்டரில் பொரித்து கொள்ளவும். இது போல எல்லா வகையான காய்களையும் பொடியாக நறுக்கி செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிபீ.ரொம்ப முன்னேரிட்டீங்க..சமீப காலமா போடும் குறிப்பு படங்கள் தெளிவா கவரும் விதமா இருக்கு.பீட்சா சாஸ் என்றே ஒரு இருப்பது இப்போ தான் தெரியும்.அது அமேரிகன் கார்டனா(sause)?இது போல் ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப கூடிய கிட்ஸ் ரெசிபீ இருந்தால் நிறைய யாரும் சமைக்கலாமுக்கு கொடுங்க..thank u jaleelakka

சூப்பர்.very interesting.ப்ரெட் சாண்ட்விச் என்றால் என் மகனுக்கு வேறு எதுவும் வேண்டாம்.ஐ ,எனக்கு ஸ்கூல் கொடுத்தனுப்ப புது ரெசிப்பி ஐடியாக்கு தேங்க்ஸ்.பிட்சாபேஸ் தான் இவ்வளவு நாளும் யுஸ் பண்ணினேன்.இனி ப்ரெட் போதும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா ஓமர் எங்க பிள்ளைகளும் அப்படி தான் சாண்டிவிச் என்றால் போதும் வேறு எதுவுமே தேவையில்லை. நேற்று கூட வேறு விதம செய்தேன் ஆனால் போட்டோ எடுக்க முடியவில்லை.

இது எல்லா பிள்ளைகளிடேயும் ரொம்ப சூப்பர் ஹிட்டான ரெஸிபி.
ஆனால் செய்து அனுப்பினால் கூட இரண்டு முன்று பேருக்கு சேர்த்து கொடுத்து அனுப்புங்கள்.
ஜலீலா

Jaleelakamal

தளிக்கா ஆமாம் அமெரிக்கன் கார்டன் தான்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
பின்னூட்டம் என்ற பூஸ்டுக்கும் நன்றி
ஜலீலா

Jaleelakamal

ரெண்டு விதமான டோஸ்டர் இருக்கு.. ஒன்னும் நாம் ரெகுலரா பிரெட் டோஸ்ட் செய்வது, அதிலே பிரெட்டை வெர்டிகலாக போடனும் ... அதனால் ரெண்டு பிரெட்டிற்க்கும் இடையில் இருக்கு பொருள்கள் கீழே விழ வாய்ப்பிருக்கு.. இன்னொன்று டோஸ்டர் அவன்.. அதிலே மைரோவேவ்வில் வைப்பதுபோல வைக்கலாம்.. அதில் பிட்சா கார்லிக் பிரெட் எல்லாம் டோஸ்ட் செய்யலாம் அந்த டோஸ்டர் அவன் இருந்தால் அதில் வையுங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் பஜ்மிலா, இலா

இதை டேஸ்டரிலும் வைக்கலாம்.
நான் எப்போதும் மில்க் பிரட்டில் செய்வேன் ஆனால் குறிப்பில் உள்ளது சாதா பிரெட் அதான் ஒட்டாத மாதிரி தெரியுது.
மில்க் பிரெட் நல்ல இரண்டு பிரெட்டும்ஜாமாகிடும்.

டேஸ்டரில் வைக்கும் ரெஸிபியும் நிரைய கொடுத்துள்ளேன் செய்து பாருங்கள்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா நேத்து மாலை என் கணவருக்கு ஆபிஸ்க்கு கொடுத்து அனுப்ப டேஸ்டரில் வைத்து செய்தேன், ரொம்ப நல்லா இருந்ததுக்கா , நன்றி

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அக்கா வெஜ் பீட்சா ப்ரெட் செய்தேன் சுவையாக இருந்ததாம்..இன்று மாலை தான் அவர் வந்ததும் செய்து கொடுத்தேன் நீயே கண்டுபுடிச்ச போலிருக்கு என்றார்..நீங்க சொல்லி தந்தது என்று சொன்னேன் நல்லா இருந்ததாம்..3 தான் செய்தென் நான் சுவை கூட பார்க்கவில்லை...தேன்க்ஸ் அக்கா.ஆனால் சாசேஜை வெட்டி வதக்கி போட்டேன்..பிட்சா சாஸ் இல்லாததால் பார்பிகியூ சாஸ் போட்டேன்

ஜலிலாக்கா,

இன்று டின்னருக்கு என் பசங்களுக்கு உங்க வெஜ் பீட்சா ப்ரெட் செய்து கொடுத்தேன். ரெண்டு பேருக்குமே ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. அதுவும் என் மகள், நாளைக்கு ஸ்கூலுக்கு இதுதான் லன்ச் கொடுக்க வேண்டுமென்று கண்டீஷனாக சொல்லிவிட்டாள்!. (காலையில் எழுந்து செய்து கொடுக்கவும் ஏற்ற மாதிரி ரொம்ப ஈஸியாக இருக்கு, குறிப்பு!) டேஸ்டியானது, கூட கொஞ்சம் காய்கறியும் சேருவதில் எனக்கும் சந்தோஷம்! அசத்தலான இந்த குறிப்புக்கும் நன்றி அக்கா!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாஷினி , தளிக்கா, ஸ்ரீ வெஜ் பிட்சா பிரெட் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி/
ஆகா ஸ்ரீ உங்க மகள் லன்சுக்கும் கேட்டாலா ரொம்ப சந்தோஷம்.
தளிக்கா பிட்ஜா சாஸ் இல்லை என்றால் கெட்சப்பும் போடலாம்.

இது எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஜலீலா

Jaleelakamal

நான் சப்பாத்தி ரோல் இந்த முரையில் செய்தேன். எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. உங்கள் பணீ தொடர வாழ்துக்கள்.

alhamdhulillah

உங்களுடைய வெஜ் பிட்ஸா பிரெட் செய்தேன், நன்றாக இருந்தது. ஆனால் பிஸ்ஸா சாஸ் உப்யோகிக்கவில்லை. பிஸ்ஸா ஸாஸுக்கு பதிலாக வேறு என்ன சாஸ் யூஸ் செய்யலாம் ?. அல்லது பிஸ்ஸா ஸாஸ் செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்

http://www.arusuvai.com/tamil/node/7995

டியர் ஜரினா பிட்சா சாஸுக்கு பதில் டொமேட்டோ கெட்சப்பும் தடவலாம்.
சகோதரி நர்மதா வுடைய பிஸ்ஸா குறிப்பில் பிட்சா சாஸ் செய்யும் முறை இருக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.
உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி.
ஜலீலா

Jaleelakamal

hai mam
உங்கள் பிட்ஸா ப்ரெட் என் பையனுக்கு மிகவும் பிடிக்கும் அடுத்தவாரம் விடுமுறை கண்டிப்பாக் செய்கிறேன்.

புதன்று வெஜ் பிட்ஸா பிரெட் செய்தேன், நன்றாக இருந்தது. நன்றி.

indira

இந்திரா உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இதில் நிறைய குறிப்புகள் நானே டிரை பண்ணதும் இருக்கும்
பிட்ஸா தோசை இருக்கும் பாருங்கள்.
கிரிஸ்பி லாலிபாப் பாருங்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஜலீலா

Jaleelakamal

reciepe romba arumai ya irukku.bread a oven la vaikama toast seidhu mattum sappita nalla irukkuma

சீஸ் மொஜெரெல்லா சீஸ் இல்லாவிட்டால் சாதா சீஸ் யூஸ் பண்ணலாமா?