அழகிய தொப்பி ப்ரோச் செய்வது எப்படி?

தேதி: November 17, 2008

5
Average: 5 (3 votes)

இந்த அழகிய தொப்பி ப்ரோச்சை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

சிறிய பிளாஸ்டிக் மூடி
அட்டை
துணி
மக்கரம் நூல்(macrame twine) 2.5 மீட்டர்
கம்
மாஸ்க்கிங் டேப்
ப்ரோச் பின்
ஊசி, நூல்
பென்சில்
கத்தரிக்கோல்

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளது போல் மூடியின் அளவை விட பெரிய அளவில் அட்டையில் இரண்டு வட்டமான துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அட்டையை விட பெரிய அளவில் துணியில் இரண்டு துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காண்பித்துள்ளபடி துணியின் மேல் அட்டையை வைத்து ஊசி நூலால் துணியை சுருக்கி வைத்து தைத்து விடவும். இதைப் போல் இரண்டு அட்டைகளிலும் செய்துக் கொள்ளவும்.
அட்டையை துணியுடன் தைத்த பிறகு திருப்பி வைத்து ஓரங்களை சுற்றிலும் தைத்து எடுத்துக் கொள்ளவும்.
மூடியை சுற்றிலும் மாஸ்க்கிங் டேப்பை ஒட்டி படத்தில் உள்ளது போல் ஒட்டிய பகுதி போக மீதமிருக்கும் டேப்பை நறுக்கி விடவும்.
இந்த மூடியுடன் உள்ள மாஸ்க்கிங் டேப்பை தைத்து வைத்திருக்கும் துணியின் நடுவில் ஒட்டி விடவும்.
மூடியின் மேற்பக்கம் கம் தடவி நூலை நடுவிலிருந்து வட்டமாக சுற்றி வைத்து ஒட்டிக் கொண்டே வரவும்
இதைப் போல் தொடர்ந்து சுற்றி மூடியின் கீழ்பாகம் மற்றும் துணியின் மீதும் ஒட்டி விடவும். கடைசியில் முடிக்கும் போது நூலை வெட்டி விட்டு வெளியில் தெரியாதவாறு சுற்றி ஒரு நூலின் அடியில் சொருகி ஒட்டி விடவும்.
நூலை ஒட்டிய பின்னர் கம் நன்கு காய்ந்ததும், தொப்பியின் பின்புறம் திருப்பி ப்ரோச்பின்னை வைத்து தைத்து விடவும்.
ப்ரோச் ரெடி அதன் மீது சிறிய பூக்கள், போக்கள் ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் இமா.
மிகமிக அழகாக இருக்கிறது உங்கள் தொப்பி புறோச். வாழ்த்துக்கள்.

செபா.

ஆஹா இமா அவர்களே ரொம்ப நல்லா இருக்கு.இப்பவே செய்து பார்க்கனும் போல இருக்கு.சூபெர்ப்.

ரொம்ப அழகா இருக்கு.செய்ய ஆசைதான்.இவ்வளவு பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது.வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் தனு, ஆசியா,
பாராட்டுக்கு நன்றி. செய்து பார்த்துக் குறை, நிறை சொன்னால் இன்னும் சந்தோஷப்படுவேன். செபாதான் எனது வழிகாட்டி. ஆரம்பத்திலிருந்து என்னை ஊக்குவித்தவர் அவர்தான். இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் அவரையே சாரும். நன்றி செபா. ;-D.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா,மிகவும் அழகாக இருக்கிறது. வாணி

அன்பின் இமா, மிகவும் அழகான தொப்பி. முகப்பில படம் பார்த்த உடனேயே இது உங்கடையாதான் இருக்கும் என நினைத்தேன் :) இப்படி சிறுவயதில் நல்லூர் திருவிழாவில் தலைக்கு போடும் பேர்ள் கலர் கலராக வாங்கிய ஞாபகம் வருது. இப்படி தொப்பியில் ரப்பர் பான்ட் போட்டு வைத்திருப்பார்கள். (அது வாழைநாரில் பின்னியதாக நினைவு) அலிஸ் பான்டிலும் கூட போடலாம்தானே? மகளுக்கு கலர் கலரா செய்யலாம். (இப்பவே அவக்கு தோள்வரைக்கும் முடி வளந்திட்டுது :)).நல்ல குறிப்புக்கு மிக்க நன்றி.
-நர்மதா :)

வாணி, நர்மதா, பாராட்டிற்கு நன்றி.
நர்மதா, நான் சிலைட் கிளிப் வைத்துத் தைக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வது அதைவிட நல்ல யோசனையாக இருக்கிறதே.
1.ரப்பர் பான்ட்டில் இணைக்கலாம்.
2.அலிஸ் பாண்ட்டில் இணைக்கலாம்.
3.அணியும் உடைக்கு மாட்சிங்காகச் செய்யலாம்.
இது மற்றவர்களுக்கும் உதவும். உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நர்மதா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா அக்கா என்ன அருமை சூப்பரோ சூப்பர் உங்களுக்கு ரொம்ப தன் பொருமை.
படம், தொப்பி, புரோச் எல்லாம் அருமை.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா,
;-D. ரைமிங்காக வாழ்த்துகிறீர்கள். பாராட்டுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன் இமா அக்கா!!!

‍- இமா க்றிஸ்

கொஞ்சம் நேரம் கிடைச்சு ஒரு ரவுண்ட் வந்தேன். திரும்ப நர்மதாட கொமண்ட் கண்ணில பட்டுது.
இதுக்குப் பிறகு... நர்மதா தொப்பி செய்து, எனக்கு படம் அனுப்பி... ஃப்ரெண்ட் ஆகீட்டோம் நாங்கள். ;)
நர்மதா போன வருஷம் ஒரு கைவினைக் குறிப்பு போட்டிருந்தவ. இந்தக் குறிப்போட தொடர்பு இருக்கிறபடியால் லிங்க் இங்க போடுறன். http://www.arusuvai.com/tamil/node/19794

நன்றி நர்மதா.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta