மில்க் பேடா

தேதி: November 17, 2008

பரிமாறும் அளவு: 70-75 எண்ணிக்கைகள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் - மூன்று லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
நெய் - மூன்று மேசைக்கரண்டி
சோளமாவு - இரண்டு தேக்கரண்டி


 

முதலில் வாயகன்ற அல்லது அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி சூடாக்கவும்.
பால் நன்கு சூடேறி கொதிக்கும் போது மேலும் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
பின்பு மீதியிருக்கும் பாலில் சோளமாவை கரைப்பதற்கு கால் கோப்பைக்கும் குறைவாக எடுத்து வைத்துவிட்டு மீதி பாலை ஊற்றி கலக்கிவிடவும்.
பால் நன்கு சுண்டி சுமாராக ஒரு லிட்டர் அளவிற்கு வந்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து சோளமாவை கரைத்து ஊற்றி இடைவிடாது கிளறவும்.
அதைத் தொடர்ந்து சர்க்கரையைச் சேர்த்து கிளறிவிட்டு நெய்யில் பாதியைச் சேர்த்து கைவிடாது கிளறி கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய பால்கோவாவை மீண்டும் அடுப்பில் இளஞ்சூட்டில் வைத்து மீதியிருக்கும் நெய்யை ஊற்றி கிளறிவிடவும்.
தொடர்ந்து அடிப்பிடிக்காவன்னம் கிளறி கெட்டியாகத் தொடங்கும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
நன்கு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் சிறிய உருண்டைகளாகச் செய்து சிறிய அச்சுகளில் வைத்து அல்லது வேண்டிய வடிவத்தில் பேடாக்கள் செய்துக் கொள்ளலாம். சுமார் 70-75 எண்ணிக்கைகள் கிடைக்கும்.


மொத்த பாலையும் ஒரே நேரத்தில் ஊற்றி செய்வதால் பால் அடிபிடிக்க நேரிடும் அதனால் இவ்வாறு மூன்று பாகமாக பிரித்து சுண்ட வைத்தால் நேரமும் மிச்சமாகும் பாலும் அடிபிடிக்காது. மேலும் இதற்கு மரக்கரண்டியை பயன்படுத்துவது நல்லது இதனால் கிளறுவதில் சிரமம் இருக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோஹரி சேச்சி
பிசியாகிட்டீங்க வருவதே இல்லை..எனக்கு இது மிகவும் பிடிக்கும்..இதனை பால் பொடியால் செய்யலாமா..பாலை தண்ணீரில் கரைத்து பின் இதே போல் செய்யலாமா.

ஹலோ தளிகா செல்லம் எப்படி இருக்கீங்க? மில்க் பேடாவை பால் பவுடரில் செய்தால் நன்றாக வராது பிசு பிசுப்பாகி(இது என் கணிப்பு தான்)உருண்டை பிடிக்க வராது. இந்த மில்க் பேடா சற்று கெட்டியாக இருக்க வேண்டும் ஆகவே பால் மட்டும் தான் சரியாக இருக்கும்.

செல்லம்னீங்களே எனக்கு சந்தோஷமா இருந்தது:-)..இன்று 1 லிட்டெர் பாலில் செய்தேன் எண்ணி 25 உருண்டைகள் வந்தது .செம்ம டேஸ்டியாக இருந்தது.வெளிய வாங்கும் மில்க் ஸ்வீட் விட டேஸ்டி..சூப்பர்..தேன்க் யூ சோமச் டியர்

அன்பு தங்கை தளிகா எப்படி இருக்கீங்க? குழந்தை நல்லா இருக்காங்களா? இந்த மில்க் பேடா நல்லா இருந்திச்சா ரொம்ப சந்தோசம்.குறிப்பை செய்து பார்த்ததற்கும் பின்னூட்டம் அளித்ததற்கும் மிக்க நன்றி.

மனோஹரி மேம் நன்றி. நான் கண்டிப்பா செய்கிறேன். எனக்கு மில்க் ஸ்விட்ஸ் தான் ரொம்ப பிடிக்கும், அவசியம் செய்கிறேன். நன்றி.

ஹலோ மனோகரி அக்கா இன்று மில்க் பேடா செய்தேன். சுவை அருமை. சோள மாவு மட்டும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தேன். பொறுமையின் மறு உருவம் மில்க்பேடாவின் சுவை அபாரம். நன்றி அக்கா

அன்பு அரசி இந்த மில்க் பேடா குறிப்பை செய்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. சோளமாவை கூட்டிச் செய்தீர்களா அப்படியானால் செய்ய அதிக நேரம் எடுத்திருக்குமே!ஆனாலும் மில்க் பேடாக்கள் சுவையாய் இருந்தது ஆறுதலாய் இருந்திருக்கும் தானே.மிக்க நன்றி.

அக்கா நீங்க உண்மையிலேயே பெரிய எக்ஸ்பர்ட்ஸ் ங்க. கரெக்டா சொல்லிட்டீங்களே. ஆமாங்க நிறைய நேரம் பிடிச்சது. நான் நினைத்தேன் சோள மாவு அதிகமாக சேர்த்தால் சீக்கிரம் திக்காகி திரண்டு வந்துவிடும் என்பது என் கணிப்பு. ஆனால் என் கணிப்பு பொய்யாகிவிட்டது.LONG TIME எடுத்தது. மீண்டும் ஒரு முறை செய்து பார்த்து பதிவு போடுகிரேன். நன்றி அக்கா.

அன்பின் மனோகரி மேம், இதுவரை உங்களுடைய குறிப்புகளில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது இதுதான். :( இது எனக்கு இறுகவும் இல்ல. களியாகவும் இல்லை. கோவா மாதிரி வந்தது. சுவையும் அப்படித்தான் இருந்தது. நிறமும் லைட் மஸ்டர்ட் ஆக இருந்தது. இப்படித்தான் இருக்குமா? அல்லது வெள்ளையாக இருக்க வேண்டுமா?
-நர்மதா :)
பி.கு: ஆனாலும் ச்ய்தது ஒன்றும் மிஞ்சவில்லை. போக வர சாபிட்டு முடித்தாயிறு.:)