கறி பொடிமாஸ்

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறித்துண்டுகள்- கால் கிலோ
பொடியாக அரிந்த வெங்காயம்-2 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-5
மிலகு- அரை ஸ்பூன்
சீரகம்- அரை ஸ்பூன்
சோம்பு- ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
தேங்காத்துருவல்-அரை கப்
முட்டை- 1
தேவையான உப்பு
எண்ணெய்- 4மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்


 

கறித்துண்டுகளை நன்கு கழுவி சிறிது நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு கலந்து வேகவைத்துக் கொள்ளவும்.
அம்மியில் மசாலா சாமான்களை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு இஞ்சி பூண்டு விழுது, கறி சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்னெய் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இடித்த கறியை சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறவும். பின் அடித்த முட்டையை சேர்த்துக் கிளறவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்