தக்காளி சட்னி-2

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளிப்பழம்-200 கிராம்
புளி- அரை நெல்லி அளவு
இஞ்சி- அரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல்-10
தனியா- 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- கால் கப்


 

தக்காளிப்பழங்களை சுடு நீரில் போட்டு தோல்களை நீக்கி அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்னெய் ஊற்றி தக்காளியையும் மஞ்சள் தூளுடன் சேர்த்து கொதிக்க விடவும். மிளகாய் வற்றலையும் தனியா, வெந்தயத்தையும் பொன்னிறமாக வறுத்து புளி, இஞ்சி, பொட்டுக்கடலையை சேர்த்து மையாக அரைக்கவும்.
தக்காளி வெந்து கெட்டியாகி, மேலே எண்ணெய் தெளிந்ததும் அரைத்ததைச் சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெந்தயம் ,பொட்டுக்கடலை சேர்ப்பது புதிதாய் இருக்கிறது.செய்து பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹி, நன் புதியது.
என் பெயர் ப்ரபதமு. நானும் உங்கல் உடைன் இனையலாமா. எனக்கு SEND அனுப்ப முடியல. எப்படி அனுப்பனும். தயவெ செய்து உதவவெம். PLEASE .

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*