சுர்ரோஸ்

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

இது ப்ரான்ஸில் பிரசித்தமான ஒரு பதார்த்தம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் பொது மக்கள் கூடும் திருவிழா மற்றும் சந்தை போன்ற இடங்களில் சூடாக செய்து ஒரு கொரணையில் போட்டு தருவார்கள் ரொம்பவும் சுவையாக இருக்கும், செய்வது சுலபம்.

 

மைதா மாவு - 100 கிராம்
தண்ணீர் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
ஐஸிங் சர்க்கரை - மேலே தூவுவதற்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் மரக்கரண்டியை வைத்து கிளறி விடவும்.
அதன் பிறகு கிளறிய மாவை நன்கு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிசைந்த மாவை முறுக்கு உரலில் பெரிய ஸ்டார் வடிவில் இருக்கும் அச்சியை போட்டு சூடாக இருக்கும் எண்ணெயில் 8 அங்குல அளவில் பிழிந்து பின்பு அதை கத்தியால் வெட்டி விடவும்.
தீயை மிதமாக வைத்து, பொன்னிறமாக மாறி வெந்ததும் எடுத்து விடவும்.
வெந்ததும் எடுத்து டிஷு பேப்பரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
சுவையான சுர்ரோஸ் தயார். பரிமாறும் போது அதன் மேல் ஐஸிங் சர்க்கரையை தூவி பரிமாறவும். சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பிரான்ஸில் வசித்து வரும் <b> திருமதி. ரஸியா </b> இஸ்லாமிய உணவுகள், சைனீஸ், பிரெஞ்சு உணவுகள் என்று அனைத்திலும் அசத்தக் கூடியவர். ஏராளமான வித்தியாசமான குறிப்புகளைக் கொடுத்துள்ளார். இங்கே சுர்ரோஸ் என்ற ஒரு வித்தியாசமான செய்முறையை படங்களுடன் விளக்கியுள்ளார் நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் ரஸியா சூப்பர் சுர்ரோஸ் செய்துகாண்பித்தது மிக அருமை.வாங்க வாங்க இன்னும் புதுமையான ரெஸிபியோடு.......
ஜலீலா

Jaleelakamal

ரசியா சுர்ரோஸ் அருமையாக உள்ளது..சூடாக சாப்பிட சூப்பர்..மகளுக்கு என்பதால் 1 ஸ்பூன் பட்டரும் சேர்த்து தான் பிசைந்தேன் மணமாக உள்ளது.பார்த்ததும் செய்துவிடுமளவு எளிமையாக உள்ளது..படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வைக்கிறேன்..அட்மின் ஒரு நாள் இனி படமே வேண்டாம் என்று சொல்லுவார் என நினைக்கிறேன்.இதனை ஆங்கிலத்தில் எப்படி எழுத??churrose என்று நேற்று தலைப்பில் பார்த்தேன் ஆனால் இன்று காணவில்லை

பார்ப்பதற்கு சிக்கன் சாசேஜ் மாதிரி இருக்கேன்னு பார்த்தா ,இது வேறு .சூப்பர் .

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி அக்கா உங்கள் வரவேற்ப்பிர்க்கு,ரொம்ப ஈஸியா இருக்கும் செய்து பாருங்க...

வணக்கம் அக்கா கரட் ஜுஸ் எப்படி செய்வது கர்ப்பமான பெண்கள் குடிக்கலாமா

வினி கொஞ்சம் பொருங்கள் கேரட் ஜூஸ்

என் குறிப்பி இருக்கு எடுத்து தரேன்
ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளாச்சு பேசி ரீமா எப்படி இருக்கிறாள்?சுர்ரோஸ் உடனே செய்திட்டீங்களா?இது சீக்கிரம் செய்திடலாம் !பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்தபின்பு இதை செய்து தருவேன் உடன் காலியாயிடும்,நீங்கள் செய்ததுபோல் நானும் ஒருமுறை பட்டர்போட்டு செய்து பார்க்கிறேன்,இதை ஆங்கிலத்தில் ஸாரி ஃபிரெஞ்சில் churroseஎன்றும் chichisஎன்றும் சொல்வார்கள் இதர்க்கு வழக்கத்தில் இரண்டு பேர் உலவுகிறது ரொம்ப நன்றி ரூபி செய்து பார்த்த் பின்னூட்டம் அனுப்பியதர்க்கு!

ஹாய் ஆசியா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!செய்தும் பாருங்க!சரியா!

ரஸியா,தளிகா இங்கும் இந்த சுர்ரோஸ்(churros) மக்கள் கூடும் இடங்களில் செய்து விற்பார்கள். இங்கு பட்டரும், முட்டையும் சேர்த்து செய்கிறார்கள். பட்டர் சேர்ப்பதென்றால் தண்ணீருடன் சேர்த்து பட்டரையும் கொதிக்க வைக்க வேண்டும்.

ரஸியா படங்கள் எல்லாம் தெளிவாக பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

அப்பாடி உங்களை போனில் தான் பிடிக்க முடியல அருசுவையிலும் காண முடியல! எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?அங்கும் இது கிடைகிறதாக்கா ஆனால் இங்கு பட்டர் சேர்க்க மாட்டார்கள் சாப்பிடும்போது அவர்கள் கேட்ப்பார்கள் சாக்லேட் விரும்புபவர்கள் சாக்லேட் பேஸ்ட் வாங்கிகொள்ளலாம் அதர்க்கு தனி ரேட்!15எண்ணிக்கைவைத்து 6.50 ஈரோ என்று தாளிக்கிறாங்க!நாம் வீட்டில் செய்தால் ரொம்ப சிக்கனம்,சரிக்கா முட்டை எப்படி சேர்க்கிறாங்க?தண்ணீரை கொதிக்கவைத்து ஊற்றுகிறோம் எப்படி சேறும்?பட்டர் ஓக்கே!நீங்கள் அறிந்த ரகசியத்தயும் சொல்லுங்கோ!

மேடம்,தண்ணீர் 100G என்பதை கப் அளவில் கொஞ்சம் சொல்ல முடியுமா?இப்போதே செய்ய நினைக்கிறது.கைவசம் ஐசிங் சுகர் இல்லை.சீனியை ப்ளென்ட் பண்ணி போடலாமா?

busy has no time 4 tears

ரஸியா உன் ஃபோனை எப்போ மிஸ் பன்னேன்னு தெரியலையே. ஸாரிமா எங்கேயாவது போயிருந்தேனோ :-( வீட்டில் பிள்ளைகள் அனைவரும் நலமா? இங்கு அனைவரும் நலம்.

அப்புறம் இந்த சுர்ரோஸ் டிவியில் பார்த்ததுதான். நான் இதுவரை செய்ததில்லை. ஆனா சாப்பிட்டுருக்கேன். ஒரு கப் மாவிற்கு கால் கப் பட்டரை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து பட்டர் கரைந்தவுடன் உன்னுடைய செய்முறைப்படி மாவு ரெடி பண்ணனும். மாவு கொஞ்சம் ஆறியவுடன் ஒவ்வொரு முட்டையா ஒரு 3 முட்டையை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கனும். இப்ப மாவு தளர்வா ஆகிவிடும். இதை ஒரு பேஸ்ட்ரி பாகில் போட்டு பிழியனும். உன்னுடைய செய்முறை எளிமையாக பட்டர் சேர்க்காததால் ஹெல்தியாவும் இருக்கு.

ஆசைஆசையாக மாவு தயார் செய்து, முறுக்கு வுரல் இல்லாததால், சிறு சிறு உருண்டைகளாக (சீடை போல்) சுமார் 10 உருண்டைகள் எண்ணையில் போட்டேன். முதலில் 1 வெடித்தது. சமையல் அறை விட்டு வெளியில் வந்துவிட்டேன். பிறகு என்ன? தீபாவளி தான்.... சர வெடி தான்....
I couldn't go near the stove to switchit off. Mine is a electric stove. So, I went to another room where all the electric switch controls are there. I swiched off control switch for the stove. Thank God I remembered that.
Please friends don't try like me. My intention of this post is to alert people like me.

ஸ்ரீதேவி என்னடா இபோ திபாவளியானு பாத்தா உங்க அனுபத்தை படித்ததும் எனக்கும் பயமாயிடுத்து... இதுக்கு பயந்துட்டே நான் சிடையே செய்யமாட்டேன்....ஆனா நீங்க முருக்கு பிடி இல்லைனா பேஸ்ட்ரி பாகில் பன்னி இருக்கலாம் அது நல்லா வந்து இருக்கும்...எதுக்கும் எண்னெயில் பன்னும் போது கவனமா பன்னுங்கமா

ரஸியா உங்க ரெசிபி நல்லா இருக்கு சிக்கிரமா செய்துடுரேன்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ரசியா மகள் நலமாக இருக்கிறாள்.உங்களைத் தான் பிடிக்கவே முடீல..நேற்று பசியோட இவர் மாலை வந்தபோது காலை செய்த மீந்துபோன சுர்ரோஸ் 4 இருந்தது அதனை சாப்பிட்டார்..பொதுவாக புதுசா எது ட்ரை பன்னினாலும் நீ செய்யும் அளவுக்கு இல்லம்பார்..நேற்று எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு வாய் விட்டு பாராட்டினார்.இன்னுமொன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் எண்ணை பொரிக்க அதிகம் பயன்படுத்த மாட்டேன்..குழிபாத்திரத்தில் 3/4 கப் அளவுக்கு எண்ணையில் என்பதால் நீளமாக போட இடமிருக்காது அதனால் முறுக்கு போலவே பிழிந்தேன்:-D..

நாம் எந்த கப்பில் மாவை எடுத்துக்கொள்கிறோமோ அதிலேயே தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்
ஐஸிங் சுகர் இல்லயின்னா பரவாயில்லை சீனியை ப்ளெண்ட் பண்ணினாலே போதும் ட்ரை பன்னுங்க ஃபஜ்மிலா

நான் பல முறை போன் செய்த போது நீங்கள் கிடைக்கவில்லை சுர்ரோஸ் முட்டை கலந்து செய்வதைவிட இந்த முறை பெட்டெர் என நினைக்கிறேன் வேலை மிச்சமாச்சுள்ள!ஆனால் பட்டர் போட்டு செய்து பார்க்கனும் ரூபியும் பட்டர் போட்டு செய்ததாக சொன்னாங்க நானும் அடுத்தமுறை ட்ரை பன்றேன்!நானும் இதை இப்போ பேஸ்ட்ரி பாகில் தான் செய்கிறேன் அதில் நல்ல ஸ்டார் அச்சு உள்ளது,அதில் பிழியும் போது இன்னும் பார்க்க அழகாக இருக்கிறது,நான் கூட நினைத்தேன் அதில் பிழிந்து அனுப்பலாம் என்று,ஆனால் எல்லோரிடத்திலும் அது இருக்காது ,முறுக்கு உரல் அனேகமானவரிடம் இருக்கும் அதனால் தான் அப்படி செய்து அனுப்பினேன்

தீபாவளி முடிந்தபின்பு சரவெடி வெடித்தீங்களா?
சரியாப்போச்சுப்பா இந்த முறையை யாரும் ட்ரை பன்னிடாதீங்கப்பா,பேஸ்ட்ரி பேகில் போட்டு செய்து பாருங்கப்பா

ரொம்ப நன்றி ஹாஷினி
கவனமா செய்யுங்க,ஆனால் இது பேஸ்ட்ரி பாகிலோ,முறுக்கு உரலிலோ செய்யும் போது வெடிக்காது பயமில்லாமல் செய்ய்லாம்,அதுமட்டுமல்ல மாவு கட்டி இல்லாமல் இருக்கவேண்டும்,மாவில் தண்ணீர் படாமல் கட்டி விழுந்துவிட்டால் அந்த கட்டி உள்ள இடங்கள் தெரிக்க வாய்ப்பு உள்ளது,அதனால் கவனமாக செய்யுங்க!
ரொம்ப நன்றிமா உங்கள் பின்னூட்டத்திர்க்கு

உங்கள் கணவரிடமிருந்து பாராட்டு!
நாம் சமைத்து மற்றவர் பாராட்டும் போது ஏற்படும் சந்தோஷத்திர்க்கு அளவில்லை தானே!ஆனால் இது சூடா சாப்பிடனும்ப்பா!அப்பொழுது தான் க்ரிஸ்பியா இருக்கும்,

ரஸியா இன்று உங்களுடைய சுர்ரோஸ் செய்தேன் டெஸ்டி & கிற்ஸ்பியாக இருந்தது.thanks.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியை தருகிறது!

அன்பின் ரஸியா... உங்களின் இந்த சுர்ரோஸ் ரெசிபியை செய்து பார்த்தேன் நல்ல டேஸ்ட்டாகவும், கிறிஸ்ப்பியாகவும் இருந்தது. என்னிடம் முறுக்கு அச்சி இல்லை அதற்குப்பதிலாக ஐஸிங் அச்சில் ஸ்டார் நொஸல்ஸ் போட்டுப் பிழிந்தேன். நன்றாக வந்தது.

அன்புடன் ரிகா.

அன்புள்ள ரிகா
நீங்கள் சரியாக தான் செய்துள்ளீர்கள் இது ஐஸிங் அச்சில் செய்யும்போது வடிவாக இருக்கும் இந்த குறிப்பு ரொம்பவும் ஈஸி!எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பது சந்தேகம் இல்லை!ரொம்ப நன்றிமா உங்கள் பின்னோட்டத்திர்க்கு!
என்றும் அன்புடன்
ரஸியா

அடடா இரண்டுமுறைபதிவாகிட்டது
:-)

ரஸியாக்கா நேற்று சுர்ரோஸ் செய்து,ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.செய்வதற்க்கு ரொம்ப ஈஸியா இருந்தது.மொத்ததில் சூப்பரா இருந்தது.

அன்புள்ள மேனகா,சுர்ரோஸ் உங்களுக்கு பிடித்துவிட்டதா?இது எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை!இனி அடிக்கடி செய்து ரசித்து ருசித்து சாப்பிடுங்க!:-))உங்கள் பின்னோட்டத்திர்க்கு ரொம்ப நன்றி!

அன்பின் ரசியா,
சுவையான சுர்ரோஸ். சாக்லெட் சிரப்புடன் இன்னும் சுவையாக இருந்தது. போன வியாழக்கிழமையே செய்திட்டன். பின்னூட்டமிட தாமதமாகிவிட்டது. பாராட்டுக்கள்.
-நர்மதா :)

அன்புள்ள நர்மதா,
எப்படி இருக்கீங்க?மகள் நலமா?உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!இது சாக்லேட் சிரப்புடன் சுவையாக தான் இருக்கும்!மறக்காமல் பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி நர்மதா!

அன்பின் ரஸியா,நேற்ரு சுர்ரோஸ் செய்தேன்.நானும் கணவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.அவசர விருந்தாளிகளுக்கு சுலபமாக செய்து கொடுத்து அசத்துவதற்கு இலகுவான சிக்கனமான அயிட்டம்.மிக்க நன்றி.தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

busy has no time 4 tears

அன்புள்ள ஃபஜ்மிலா,
எப்படி இருக்கீங்க?திடிர் விருந்தாளிகளுக்கு சுலபாமக செய்வதர்க்கு ஏற்றதுதான்,நீங்கள் சொல்வதுபோல் சிலவும் சிக்கனம்.இதர்க்கு எந்த முன்னேர்ப்பாடும் இல்லாமல் உடன் செய்யலாம்.மைதா, சீனி, எண்ணை இருந்தால் போதும,இந்த பொருட்க்கள் எப்பொழுதும் நம் கைவசம் இருப்பது தான்.தாமதமானால் என்ன!பின்னூட்டம் தந்து விடீர்களே,அது தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!ரொம்ப நன்றி உங்கள் பின்னூட்டத்திர்க்கு!

ரசியா உங்க சுர்ரோஸ்கு வாயிருந்தா அழுவும் அவ்வளவு முறை செய்தாச்சு..எனக்கு எப்படி நன்றி சொல்ரதுன்னு தெரீல..போன முறை எள் சேர்த்து செட்ய்ஹேன் அருமையா இருந்தது இன்று மவிலேயே சர்க்கரையும்,நெய்யும் சேர்த்து பிசைந்து அச்சு இல்லாமல் கைய்யாலேயே சின்ன சின்ன வால் போல் நீட்டி பொரித்தேன் ரொம்ப அருமை

எப்படி இருக்கீங்க?ஹஜ் பெருநாள் எப்படி போனது?இறைவன் அருளால் எங்களுக்கு இனிதே முடிந்தது!பாவம் அந்த சுர்ரோஸ்!அழுகைவரும் அளவு அதை ஒரு வழிபண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்!அது மட்டுமல்ல நான் செய்முறையை சொன்னால், அதை வைத்து பலமுறைகளைலில் செய்து இன்னும் சுவைக்க செய்த உங்களை நான் தான் பாராட்டவேண்டும் ரூபி!அப்புறம் நீங்கள் சொன்னது போல் ஒரு முறை பட்டர் சேர்த்து செய்தேன் அதுவும் நல்லா வந்தது!ருசி என்னவோ எனக்கு ஒரே மாதிரி தான் தெரிந்தது! உண்மைய்யில் இது சுவைய்யாக இருக்கும் என்பது நன்கு தெரியும்!எல்லோருக்கும் இது அதிகம் பிடித்திருப்பது அறிந்து எனக்கு உண்மைய்யில் மகிழ்ச்சியாக இருக்கிறது!உங்கள் பின்னோட்டம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியய் தருகிறது ரூபி!நன்றி..நன்றி!

ஹாய் ரஸியா இன்று உங்களின் சுர்ரொஸ் செய்தேன் மிகவும் நன்றாக வந்தது சுவையும் சூப்பராக இருந்தது நன்றி

ரசியா மேடம் உங்க சுர்ரோஸ் சூப்பர். நேற்று செய்தேன். சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன். அருமை.

ipa surrose seithaen super ra irunthuchu.... thanks

madhu