வெண்டைக்காய் பால்கறி

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பால் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சைபுளி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவவேண்டும். அதை ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு வெட்டவும்.
வெங்காயத்தையும், மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய், வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு தேவையான உப்பும், சிறிதளவு நீரும், எலுமிச்சைபுளி சேர்த்து மூடி அடுப்பில் வைக்கவும்.
வெண்டைக்காய் வெந்ததும் பால் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது, ஞாபகசக்திக்கு அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.இதில் நார்ச்சத்து அதிகம்.இதைப் பொரிக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். பால்கறி செய்து பொழுது குறைந்த நிமிடதில் சமைப்பதால் சத்துக்கள் அப்படியே இருக்கும்.
சிறிதளவு நீர் சேர்க்கவும் ஏனெனில் வெண்டைக்காயிலும் நீர் இருக்கிறது. அவியும்போது எலுமிச்சைபுளி சேர்ப்பதால் வழவழப்பு தன்மை குறையும்.

மேலும் சில குறிப்புகள்