பிரட் ஜாமூன்

தேதி: November 20, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரட் - 1 பாக்கெட்
சீனி - 200கிராம்
பட்டர்(அ)நெய் - 100கிராம்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய்(அ)ஏதாவது எசன்ஸ் - 3


 

1. பிரட்டின் ஓரங்களை
வெட்டிவிட்டு விருப்பமான
வடிவத்தில்
வெட்டிக்கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் சீனியை
போட்டு 1/2கப் தண்ணீர் ஊற்றி
பாகு காய்ச்சவும்.

3. பாகு கொதித்தவுடன்
ஏலக்காய் தட்டி
போட்டு,பாகு
பிசுக்கு பதம்
வந்தவுடன்,அடுப்பை அணைத்து
விடவும்.

4. ஒரு தவாவை அடுப்பில்
வைத்து, அதில் 2 ஸ்பூன்
பட்டர்(அ)நெய் ஊற்றி
வெட்டிய பிரட் துண்டுகளை
ஒவ்வொன்றாக போட்டு
பொன்னிறமானவுடன் எடுத்து
விடவும்.

5. இப்போது பொரித்த
பிரட் துண்டுகளை காய்சிய
பாகில் போட்டவுடன் எடுத்து
விடவும்.பாகு சூடாக
இருப்பதால் அதிகம் ஊறினால்
நன்றாக இருக்காது.

6.இப்போது சுவையான பிரட்
ஜாமூன் ரெடி.


இது சூடாக
சாப்பிட நன்றாக
இருக்கும்.வீட்டிற்கு
திடீரென்று
விருந்தினர்கள்
வந்துவிட்டால்,விரைவாகவும்
புதுமையாகவும் செய்து
தரலாம்.

மேலும் சில குறிப்புகள்