காய்கறி சூப்

தேதி: November 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.3 (4 votes)

இந்த காய்கறிகள் சூப் குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. விஜிசத்யா </b> அவர்கள். இவர் அறுசுவை நேயர்களுக்காக நிறைய குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காய்கறிகள் - ஒரு கப்(கேரட், பீன்ஸ், க்ரின்பீஸ், கார்ன்)
பூண்டு - ஒரு துண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பெப்பர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஸ்டார்ச் - 1/4 தேக்கரண்டி
பால் - 1/4 கப்


 

இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவைகள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் இஞ்சி, பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய காய்கறிகளுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் தண்ணீர் அல்லது பாலில் கார்ன் ஸ்டார்சை பேஸ்ட் போல் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பானில் பாலை எடுத்துக் கொண்டு அதில் கரைத்து வைத்திருக்கும் கார்ன் ஸ்டார்ச் மற்றும் வேக வைத்த காய்களையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சூப் சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பரிமாறும் போது சூப் பெளலில் ஊற்றி பெப்பர் பவுடர், புதினா இலைகள், ரோஸ்டட் ப்ரெட் க்யூப்ஸ் இருந்தால் அதையும் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருமே குடிக்கலாம், இதில் காரம் குறைவு.இது சளி, காய்ச்சல், குளிர், மழை காலத்திற்கும் ஏற்றது. இதேப் போல் தக்காளி சூப் செய்யலாம் இதில் காய்கறிகளுக்கு பதில் வெங்காயம், தக்காளி வதக்கி அதை பாலில் சேர்த்து இதே முறையில்
செய்யலாம். ஒரு ப்ரெட்டில் சிறிது வெண்ணெய் தேய்த்து அதை டோஸ்டரிலோ அல்லது தோசைகல்லிலோ வைத்து நல்ல மொறுமொறுப்பாக எடுத்து அதை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி இதன் மேல் போட்டும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா சூப்பர் வெஜ் சூப் விஜி சூப்பர், குளிர் ஆரம்பித்து விட்டது எல்லாம் வித விதமா சூப் செய்து குடிங்கள்.

ஜலீலா

Jaleelakamal

சதாலட்சுமி
சூப் சூப்பராயிருந்தது. என் வீட்டீல் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி விஜி.

சதாலட்சுமி

விஜி சூப் சூப்பரக இருந்தது.இன்று பிரேக்ஃபஸ்ட் இந்த சூப்பும் டோஸ்ட்டட் ப்ரெட்டும்.நான் இதுவரை சூப்பில் பால் சேர்த்து செய்ததில்லை.நன்றாக இருந்தது.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூ்ப் நன்றாக இருந்தது நன்றி

ஹாய்
இதனை பால்,கார்ன் ஸ்டார்ச் சேர்க்காமல் செயலமா.வேறு என்ன சேர்க்கலாம் திக்காக?நான் பால் சாப்பிட மாட்டேன்.]
Anbe Sivam

Anbe Sivam