குழந்தைக்கு சளி உதவுங்கள்.....

எனது குழந்தைக்கு 7 மாதம் சளி, மூக்கடைப்பால் மிகவும் அவதிப்படுகிறான். பால் குடிக்க, சாப்பிட எதுவுமே முடியவில்லை. சளி வராமல் என்னமாதிரி சாப்பாடு கொடுக்கலாம், இந்த சளித்தொல்லையை எப்படிக் குறைக்கலாம். சொல்லுங்கள் தோழிகளே. இங்கே வின்டர் ஆரம்பித்துவிட்டது எனக்கும் சளி உள்ளது இதுதான் காரணமா? நான் அடுத்த மாதம் ஊருக்கப் போகவுள்ளேன் எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் தோழிகளே.....

அன்புடன் ரிகா.

பதிலுக்கு மிக்க நன்றி.நீங்க சொல்லியுள்ளவை எதுவுமே என்னிடம் இல்லையே..அடுத்த மாதம் ஊருக்குப் போனதும் கொண்டுவந்து வைத்துக்கொள்கிறேன். இங்கே குளிர் ஆரம்பித்துவிட்டதால் அடிக்கடி சளித் தொல்லையை எதிர்கொள்ள வேண்டிவருமோ என்னவோ.

அன்புடன் ரிகா.

என் குழந்தைக்கு 15months ஆகின்றது. சளி பிடித்து இருக்கிறது...சளி பிடித்து இருக்கும் போது பால்(whole milk) கொடுத்தால் சளி அதிகமாகுமா?

தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்தால்,தக்காளி,உணவில் தேங்காய் சேர்த்தால் சளி அதிகமாகுமா?
ஆப்பிள் வாழைபழம் போன்ற பழங்கள் சாப்பிடலாமா?

குழந்தைக்கு பாலில் தண்ணீர் விட்டு குடுங்கள். பழம் எதுவும் சளி இருக்கும் போது தர வேண்டாம்.

தலையில் சிறிதளவு தேங்காய் எண்ணை வைக்கலாம். மற்றபடி உணவு ஒன்றும் பிரச்சினை இல்லை. என் குழந்தைக்கும் இதே வயது தான்.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

மேலும் சில பதிவுகள்