சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேதி: November 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

சேப்பங்கிழங்கு - 250 கிராம்
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்


 

கிழங்கை சுத்தம் செய்து வேக வைக்கவும்.
தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கி எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் கலந்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு மசாலா தடவிய கிழங்கை சிறுதீயில் மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிப்பி,எல்லாரும் ட்ரை பண்ணுங்க,மொறு மொறுன்னு சுவை அருமை.போட்டொ அட்மின்க்கு அனுப்பியிருக்கேன்.இணைப்பார் என்று நினைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா,ரொம்ப சந்தோஷம்.உங்களை போல் ஊக்கிகளால்தான் நான் உற்சாகமாக குறிப்புகள் கொடுக்கின்றேன்.

arusuvai is a wonderful website

கடலை மாவும்,அரிசி மாவும் ஒன்னரை ஸ்பூன் போட்டேன்.நன்றாக வந்தது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் சொன்ன அளவில் மாவு சேர்த்தால் இன்னும் கிரிஸ்பி ஆக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

திருமதி. ஆசியா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டின் படம்

<img src="files/pictures/seppan_roast.jpg" alt="image" />

ரொம்ப எதிர்பார்த்திட்டு இருந்தேன்,போட்டோ இணைத்தமைக்கு நன்றி,

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பார்த்தீங்களா?முதன் முதலா செய்து கொடுத்தது,ஸ்னாக் மாதிரியே சாப்பிடலாம்,ஸ்டார்டர்ஸ் கூட வைக்கலாம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா,படம் ரொம்ப அழகாக இருந்தது.நன்றி.உங்கள் ஆர்வத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
படத்தை வெளியிட்ட அட்மினுக்கும் நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்தேன் ரொம்ப நல்ல கிரிஸ்பிய வந்தது டேஸ்ட்...சூப்பர் போங்க. என் மகனுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது அக்கா. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

ஆசியா அக்கா சேப்பங்கிழங்கு ரோஸ்ட் படம் சூப்பர்.

மைதிலி

Mb

பின்னூட்டத்திற்கு நன்றி.அதிலும் மகனுக்கு பிடித்துப்போனதில் மிகவும் சந்தோஷம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, இக் குறிப்பு சூப்பராக இருந்தது. இங்கு எனக்கு ஃப்ரோஸன் காய்தான் கிடைக்கும்.அதில் செய்தும் மிகவும் நன்றாக வந்தது. என் பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு.

எனக்கு இந்த சேப்பங்கிழங்கு பண்ணனும்ன்னு ரொம்ப நாளா ஆசை... (இது பெரிசா இருக்கும் அது தானே) இங்கு எந்த பெயரில கிடைக்கும்? frozen food ஆ வாங்கினதா போட்டிருக்கீங்க... என்ன பிராண்ட்... இந்தியன் ஸ்டோர் ல வாங்கினீங்களா? ஆசியா ஒரு வாட்டி சொன்னாங்க...elephant yaam வாங்குன்னு - அந்த பேர்ல இங்க கிடைக்காது போல? .

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஆமாம் சந்தனா, இந்தியன் ஸ்டோரில்தான் frozen section-la வாங்கினேன். அதன் பாக்கெட்டில் Suran என்று போட்டிருக்கும். எனக்கு இது மட்டுமே கிடைக்கும். அந்த காயை கியுப் கியூபா கட் செய்து பாக்கெட்டில் இருக்கும்.

நன்றி வானதி... நானும் தேடிப்பார்க்கிறேன்...

அடுத்த வாரம் தான் போய் வாங்கி வர முடியும்... எனவே ஸாதிகா, இந்த சமைத்து அசத்தலாமுக்கு செய்ய முடியாது.... மன்னிச்சுக்கோங்க :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சொல்ல மறந்துட்டேன். காயை சுடு நேரில் சிறிது நேரம் போட்டு எடுத்துவிட்டு பிறகு செய்யுங்கள் (ப்ரோஸன் காய் என்பதால்). காய் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். நாண் ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் எண்ணெய் குறைவாகவே செலவாகிறது.

ஷாதிகாக்கா,
நேற்று இந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்தேன். நான் எண்ணெயில் பொரிக்காமல், நான்ஸ்டிக் தவாவில் கொஞ்சம் போல‌ எண்ணெய் விட்டு ஷலோ ப்ரை ஸ்டைலில் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. பிள்ளைகளும் வெறும் ரோஸ்ட் மட்டுமே முதலில் சாப்பிட்டுவிட்டு, பிறகு சாதம் சாப்பிட்டார்கள்! மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இப்போ தான் image பார்த்தேன்... elephant yaam, suran அல்லது jimikand.... எல்லாமே நம்ம சேப்பங்கிழங்கு பேர்கள் தான். நன்றி வானதி... jimikand fry ன்னு சாப்பிட்டு இருக்கேன்.... ரொம்ப பிடிக்கும்...நீங்க சொன்ன மாதிரி சுடுதண்ணில போட்டு செய்யறேன்..

சுஸ்ரீ, என்னப்பா நீங்களும் இப்படி ஆசை காட்டறீங்க?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கண்ணு,சந்தனா...நீ சொல்லிருக்கறது சேனைக் கிழங்கு..சேப்பங்கிழங்கு இண்டியன் ஸ்டோர்-ல
fresh-ஆவே கிடைக்கும் கண்ணு...இந்த போட்டோவை பாரம்மிணி... :)
http://365daysveg.files.wordpress.com/2008/01/arbi-raw.jpg
நம்ம ஆசியாக்கா அனுப்பி இருக்கற போட்டோ கூட சேப்பங்கிழங்கு தான் அனுப்பி இருக்காங்க!
அன்பு ஸாதிகா, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நல்லா இருக்குங்க...

அன்புடன்,
மகி

அன்பு சந்தனா,சுஸ்ரீ.மஹி அருண் உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி.கேள்விகள் பிறந்து ஏனைய ஸ்னேகிதிகளும் வந்து பதில் சொல்லி விட்டார்கள்.மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மஹி, ரொம்ப நன்றி சொன்னதுக்கு... எங்க ஊர்ல ஒரு கிழங்கு க்கு பேர் கருணைக்கிழங்கு - இது சின்னதா இருக்கும்... எனக்கு பிடிக்காது, ஏன்னா எங்கம்மா இதில குழம்பு வைப்பாங்க. ஆனா இன்னும் ஒன்று பெரிசா இருக்கும் - இதை fry பண்ணுவாங்க, அது ரொம்ப பிடிக்கும்...

நீங்க சொல்லுவதை பார்த்தா இந்த arbi/arvi/taro/colocasia தான் சேப்பன்கிழங்கு போல....

நான் சொன்ன suran/jimikand/elephant foot yam - இது சேனைக்கிழங்கு போல...

ஆனா எனக்கு jimikand fry கூட பிடிச்சிருந்ததே... சரி நானே போய் பார்த்து எது கிடைக்குதோ எடுத்துட்டு வந்து செஞ்சு பார்க்கிறேன்....

வானதி அப்போ நீங்க பண்ணினது சேனைக்கிழங்கு ஹி ஹி .....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா, மஹி துப்பறியும் சாம்பு(பி)'ஸ் எப்படி இருக்கீங்க:-) அடடா..இப்படி ஒரு பிட்டு போயிட்டு இருப்பதை நான் இப்போதான் என் தங்கை சொன்ன பிறகு பார்க்கிறேன். எனக்கு இங்க நம்ம காயில் ஒரு சிலதை தவிர எதுவும் ஃப்ரெஷ்ஷா கிடைக்காது. சேனை/சேப்ப/கருணை ஃபேமிலியில் இருந்து எனக்கு கிடைப்பதெல்லாம் அந்த ஃப்ரோஸன் காய் ஒன்னுதான். அதில் செய்தும் டேஸ்ட் சூப்பரா இருந்தது. பாவம் சந்தனாவைத்தான் ரொம்ப குழப்பிட்டேன்னு நினைக்கிறேன்:-) அதனால் நீங்க எப்ப எங்க வீட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு சேப்பன் ஐ.. மீன்...சேனை கிழங்கு ரோஸ்ட் செய்து தர்றேன்:-)

ஸாதிகா அக்கா இந்நேரம் உங்களுக்கும் சேனையும், சேப்பையும் கன்ஃபியூஸ் ஆயிருச்சா என்னால:-)
பி.கு: ஸாதிகா அக்கா இந்த அரட்டை எல்லாம் புது தளத்தில் வராது. அதனால் தைரியமா இருங்கோ:-)

ஷாதிகா அவர்வகளே, உங்கள் இந்த குறிப்பு படி சேப்பங்கிழங்கு செய்தோம். தொட்டுக்கையா செய்தது, ஆனால் செய்த உடனேவே ஆளாளுக்கு எடுத்து தட்டு காலி. அவ்வளவு நல்லா வந்தது. கூடுதலா கொஞ்சம் சோள மாவும், பூண்டும் போட்டோம். சைடு டிஷ், ஸ்நாக் ஆகா மாறிடுச்சு போங்க. தேன்க்யூ.

இதுவும் கடந்து போகும்.

பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டது குறித்து மகிழ்ச்சிபின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website