செட்டிநாட்டு கோழி பிரியாணி

தேதி: November 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (15 votes)

 

பாசுமதி அரிசி - 1 1/2 கப்
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
பட்டை - சிறுத் துண்டு
லவங்கம் - 5
பிரியாணி இலை - ஒன்று
ஏலக்காய் - 3


 

முதலில் கோழியை எலும்புடன் சேர்த்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கின கோழி துண்டுகளை போட்டு பாதியளவு தயிர், மஞ்சள் தூள், பாதியளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஊற வைக்கவும்.
வெங்காயத்தை தோல் உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, ல்வங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
அதன் பிறகு நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் பாதியளவு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்கு குழையும் அளவிற்கு வதக்கவும்.
பின்னர் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதமுள்ள உப்பு, கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து கிளறி விட்டு 3 நிமிடம் வைத்திருக்கவும்.
நன்கு எல்லாம் சேர்ந்து மிளகாய் வாசனை போனதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விட்டு வேக வைக்கவும்.
கோழி வெந்ததும் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை போட்டு மூடி போட்டு முக்கால் பதம் வேக விடவும்.
பிறகு வெந்ததும் அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுதீயில் வைத்து 10 - 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.
சாதம் நன்கு முழுவதுமாக வெந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான செட்டிநாடு கோழி பிரியாணி தயார். ஆனியன் ரைய்தாவுடன் பரிமாறவும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> திருமதி. வனிதாவில்வராணி முருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் பிரியாணி செய்திருக்கிறேன். ஆனால் சிக்கன் piece-ல் மசாலா பிடிச்சிருக்காது ஏன்? என்று தெரியவில்லை.
சொல்லுங்களேன் please

தோழி... அதற்க்கு ஒரே காரணம் தான் உண்டு. பொதுவாகவே மசாலா வகைகள் செய்யும்போது மசாலா ருசி சேர்க்கும் காய்கறிகளில் ஊற் சற்று நேரம் எடுக்கும். சிக்கன் துண்டுகள் பெரிதாக போடும்போது தான் இது அதிகம். சிக்கன் துண்டுகளில் கத்தியால் கீறல்கள் பொட்டு தயிரில் ஊற வைத்து சமைக்கவும். இது சிக்கன் மிறுதுவாகவும், மசாலா நன்றாக ஊறவும் உதவும். கூடவே நன்றாக தம் போடவும். அப்போது மசாலாவின் சுவையும், மணமும் கோழி, சாதம் அனைத்திலும் நன்றாக ஊறும். முயர்ச்சித்து பாருங்கள். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் சொன்னபடி முயற்ச்சித்துப்பார்க்கிறேன்.நன்றி தோழி.

ஹாய் வனிதா ,எனக்கு உங்கள் இந்த ரெசிப்பி ரொம்ப பிடித்திருக்கு.உடனே செஞ்சரனும்முன்னு தோனுது.ஆனா எனக்கு தம் போடும் முறை தெரியாது.அதனால் குக்கரில் செய்யலாமா?குக்கரில் ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணி விடனும்?குக்கரில் எத்தனை விசைல் வைக்கனும்?ஆவலுடன்...நன்றி

ramba

மிக்க நன்றி தோழி.

நீங்கள் வழக்கமாக எத்தனை விசில் வைப்பீங்க பாசுமதி அரிசி'க்கு? நான் இது வரைக்கும் குக்கர்'ல சமைத்ததில்லை... :( ஆனால் என் தோழி ஒருவர் 2 விசில் வைத்தால் போதும் என்று சொல்லுவார், நான் முயற்சித்தது இல்லை. தண்ணீர் இதே அளவு தான் குக்கருக்கும்.

இந்த பிரியாணி சாதாரனமாக அப்படியே அடுப்பு தனலில் 20 நிமிடம் மூடி போட்டு தம் போட்டாலே போதும்.

இல்லை என்றால் நம் ஜலீலா அவர்கள் சொல்வது போல் போடலாம்.

ஒரு அகலமான அடி சமமான பாத்திரத்தில் பிரியாணி செய்து, அதை 3/4 வெந்ததும், அடுப்பின் மேல் ஒரு தோசை கல் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரம் வைத்து, தட்டு போட்டு மூடி, தட்டின் மேல் தண்ணீர் உள்ள கனமான பாத்திரம் ஒன்று வைத்து சிறுந்தீயில் 20 நிமிடம் விடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சொல்லி இருக்கும் உங்கள் தம் போடும் முறை சரியா??!! please help... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா.. நான் சொல்றேன்...

பாஸ்மதி ரைஸ் வைத்து ப்ரஷர் குக்கரில் செய்தால்

தண்ணீர்: ஒரு அரிசி : ஒரு தண்ணீர் - வெஜ் பிரியாணி என்றால் ஒரு 1/4 கப் குறயுங்க.

ஒரு விசில் வந்ததும் - 8 நிமிஷம் சிம் - குக்கரை சூடே இல்லாத இடத்தில் வைத்து ஸ்டீம் அடங்கியதும் உடனே திறந்து கிளரி வைக்கவும்.

இதிலே வேறு வேறு பிராண்ட்க்கும் மாறும் . 1:1 ட்ரையல் எரர் முறையில் கண்டு பிடித்தது.

முன்னர் எனக்கும் வெஜ் பிரியாணி பேஸ்ட் தான் வரும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி தோழி.... ஹஹஹா.... "சாதம் சமைத்ததாக சொன்னாய்.... கூழ் தானே இருக்கிறது!!! சாதம் எங்கே??" என்றெல்லாம் கணவரிடம் வாங்கிய காலம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் இப்போதெல்லாம் எந்த அரிசியையும் மறந்தும் குக்கரில் வைப்பதில்லை. நீங்கள் சொன்ன அளவில் ஒரு முறை நானும் முயற்சிக்கிறேன் இலா. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது கூட பரவாயில்லை.. யாரையாவது வீட்டுக்கு கூப்பிடும் போது சாதாரண அரிசி சாப்பாடு கூட குழைந்து வரும்.. அதில வருகிறவர்கள் பேச்சிலர்ஸ் என்றால் கூட ஓக்கே.. பேமிலி என்றால் நிச்சயம் எப்படி அரிசி சாதம் சமைப்பது என்று நமக்கு ஒரு கிளாஸ் வேறு எடுத்துவிட்டு செல்வார்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் குக்கரில் தான் செய்வேன். ஆனால் பாத்திரத்தில் செய்வது போல் மூடி போடாமல் செய்து முக்கால் பாகம் வெந்ததும் மூடி போட்டு 7 முதல் 10 நிமிடம் வைப்பேன். நன்றாக இருக்கும்.

இலா, வனி சரியா சொன்னீங்க. ஒரு முறை நான் பிரியாணி நன்றாக செய்வதாக கூறி என் ஹஸ் அவர் நண்பரை அழைத்து வர அன்னைக்கு இந்த பிரியாணி குழைந்து பல்லை காட்டுச்சு பாருங்க(ஆனா இவர் தான் கடுப்பானார்) கடவுளே அதை நினைச்சா சிரிப்புத்தான் வரும்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

100% உண்மை உமா.... என் அம்மா குக்கரில் படும்பாட்டை பார்த்ததுண்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சகோதரி வனிதா அவர்களே, உங்கள் குறிப்பு மிக அருமை. நான் இதுவரையில் பிரியாணியே செய்து பார்த்ததில்லை.
உங்கள் குறிப்பைப் பார்த்தபின் செய்துபார்க்கவேண்டும் போல் இருந்தது. இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக உள்ளது. என் கணவர் விரும்பி சாப்பிட்டார்.
உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

திருமதி காந்தன்

மிக்க நன்றி தோழி.... இதுவே நான் இந்த பகுதிக்கு அனுப்பிய முதல் குறிப்பு. உங்கள் பதிவு உற்சாகம் அளிக்கிறது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சகோதரி, உங்கள் பதிவுகள் மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

நான் இலங்கையைச்சேர்ந்தவள். இம்முறை இந்தியா போனபொழுது அங்குள்ள இந்திய - முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் முதன்முறையாக சாப்பிட்டுப் பார்த்தேன். அதே சுவையை இன்று வீட்டில் உங்கள் உதவியால் செய்து பார்த்து சுவைத்தேன்/சுவைத்தோம்.

சிரிப்பே சிறந்த மருந்து
அரிசியை ஊற வைக்கவேண்டுமா? தம் என்றால் சுடுதண்ணீரை மேல் வைக்க வேண்டுமா?

சிரிப்பே சிறந்த மருந்து

ஆம்... 20 நிமிடம் அரிசி ஊற வேண்டும். தம் போடுவது என்றால், பொதுவாக சிறுந்தீயில் மூடி போட்டு சில நிமிடம் வைப்பதே (மசாலா நன்றாக சாதத்திலும், கறியிலும் ஊற உதவும்.). அப்படி வைக்கும்போது நேரடியாக தீ பட்டு அடியில் பிடிக்காமல் இருக்கத்தான் தோசை கல் மேல் வைப்பது. மூடிக்கும் பாத்திரத்திற்கும் இடையில் இடைவெளி இருந்தால் மசாலா வாசம் போய் விடும், என்பதற்காக தான் தட்டின் மேலே கனமான பொருள். அதனால் சூடான தண்ணீர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா வணக்கம்...
உங்கள் சமையல் குறிப்பை செய்து பார்க்க ஆவலாய் உள்ளேன்..
பிரியாணி இலை என்றால் என்ன?
மலேசியாவில் அது கிடைக்குமா என்று தெரியவில்லை?
இலை போடாமல் செய்யலாமா?

ஹாய் ப்ரேமிதா பிரியாணி இலை எல்லா இந்திய கடைகளிலும் கிடைக்கும்.indian bay leaves என்று கேட்டால் தருவார்கள்.தமிழ் கடை என்றால் பிரியாணி இலை என்று கேட்டாலே தருவார்கள்.பொதுவாக் காய்ந்த இலையாக கிடைக்கும்.மாண்டரினில் chai gui.முயற்சித்து பாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா வணக்கம்.
எப்படி இருக்கிங்க? நலமா?
உங்களுக்கு எனது நன்றிங்க...

ஹாய் ப்ரேமிதா... கவிசிவா சொல்றது சரி. கேட்டு பாருங்கள். அப்படி கிடைகாட்டா, போடாம சமைக்கலாம், அது வாசத்துக்கு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரிப்பே சிறந்த மருந்து
எனது சந்தேகத்திற்குத் தெளிவாக பதில் தந்ததற்கு மிக்க நன்றி வனிதா. நான் அரிசியை மசாலாவில் போட்டு வறுத்த பின் அளவாகத் தண்ணீர் சேர்த்து பிரியாணி செய்வேன். அதுவும் நன்றாக வரும். நீங்கள் சொன்னது போல் இனிமேல் செய்து பார்க்க வேண்டும் தோழி.

சிரிப்பே சிறந்த மருந்து

ரொம்ப நல்லா இருந்தது செட்டிநாடு சிக்கன் பிரியாணி... தேங்காய்பால் மட்டும் சேர்க்கலை. அடுப்பிலே தான் செய்தேன் . பாஸ்மதி என்பதால் ரொம்ப சீக்கிரம் ஆகிட்டது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா.... ஆனா ஒரு முறை தேங்காய் பால் சேர்த்து பாருங்க... ருசி இன்னும் தூக்கலா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I am new to this site.I tried your briyani and was very good. Thank you.

taster

மிக்க நன்றி ப்ரியா.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றிங்க வனிதா.. நீங்கள் சொன்ன மாதிரியே செய்து பார்த்தேன்..மிகவும் நன்றாக இருந்தது..

உங்கள் சமையல் குறிப்பு எங்களுக்கு தேவை...
மீண்டும் உங்களுக்கு நன்றி..

மிக்க நன்றி தோழி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi I have a doubt.
If want to make this briyani with 3 cup rice then what is the ratio of coconut milk and water.
Please help.

taster

நல்லா பாருங்க அங்க

1.5 Rice : 1.5 water: 1.5 coconut milk. Ippa sollungga 3 cups ricekku?

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

யாமினி... சந்தேகம் தீர்ந்ததா தோழி.... கணக்கு இது தான்.. 1 கப் அரிசிக்கு 1 கப் தேங்காய் பால், 1 கப் தண்ணீர். அதனால் 3 கப் அரிசிக்கு 3 கப் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் சரி.

நன்றி இலா... எனக்காக இங்கு பதில் தந்தமைக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sorry to bother you, eben i thought that but i never used coconut milk because i am new for cooking so i asked this doubt. Thank you.

taster

Thanks for the writter.I tried this briyani yesterday..Wow Wow the taste was so good.

i used olive oil(generally olive oil will not give good taste to briyani items).

But this time everything perfect.Too good taste.Just follow the same procedure.Don't skip or add any step.

Thanks a lot

Sorry for the delay in reply yamani, i just now saw your feedback. no problem at all, we will be happy to help you at any time. even i was like you before 3 years. :)

subapr... sorry i dont know your name. thanks a lot for such a wonderful feedback. i felt very very very... happy. :D

- Vanitha

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

yes Vanitha you are deserved for that.
My name is subashini,i am living in kuwait.

I ve been tired in searching good briyani recipes for long time,i ended up with yours.

now i am doing briyani one and only this way.i reprogrammed myself with this procedure only.
i am so conscious on health.

The admired thing is:

The beauty is : one onion,one tomato( and other usual kitchen items)

Note:Friends who disagree with my comment,please use Diners Chioce(Madras curry powder)at the end.
(as a karam masala)

அம்மாடியோ.... இதை விட என்னை அதிகமா யாரும் சந்தோஷ படுத்த முடியாது இன்னைக்குன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி சுபாஷினி. Im very very happy.... thanks a lot. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா இன்று மதியம் உங்களின் செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி பண்ணினேன் சூப்பரா இருந்தது.என்னவருக்கு ரெம்ப நல்லா பிடித்தது.நன்றி.

எரிக்.. தாமதமான பதிலுக்கு முதலில் மன்னியுங்கள். சமீபத்திய பதிவுகள் காண இயலாததே காரணம். செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இன்று உங்கள் செட்டிநாடு கோழி பிரியாணி செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. எனக்கே ஆச்சரியமாக இருக்கு வனி. பிரியாணி சூப்பர்!!! ரொம்ப தேங்ஸ்.

அன்புடன்
மகேஸ்வரி

வனி(செட்டிநாட்டு கோழி பிரியாணி) ரொம்ப சுப்பர். நேற்று செய்தேன் நல்லா இருந்தது நன்றி வனி

பொன்னி

செய்து சாப்பிட்டீங்களா?? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பொன்னி. :) மறக்காம பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெகு நாட்களுக்கு முன் நீங்க போட்ட பதிவை இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்த்து பிடிச்சுதுன்னு சொன்னதும் எனக்கு மகிழ்ச்சியா இருக்கு :) ரொம்ப ரொம்ப நன்றி மகேஸ்வரி. தாமதமான பதிலுக்காக கோவிக்காதீங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி
சண்டே எங்க வீட்டு விருந்தில இந்த அயிட்டம் செய்தேன்.சூபெரா வந்திச்சு வனி

மிக்க நன்றி நிகிலா. செய்து பார்த்து உடனே பதிவும் போட்டது மகிழ்ச்சியா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா