HI.....................

தோழிகளே யாருக்காவது சிக்கன் சிஸ்லர் செய்முறை தெரிந்தால் படங்களுடன் சொல்லுங்கள்................pls

KFC சிக்கன் செய்வது எப்படி?

சிக்கன் சிஸ்லர் ரொம்ப ஈஸிங்க. கோழி பிரெஸ்ட் பீஸ் வாங்கிக்கங்க (எலும்பு இல்லாம). அதை நல்லா தட்டிக்கங்க (பொடிக்க எதாச்சும் கனமா இருக்குமில்ல கிட்சன்ல, அதை வெச்சு). இதுல இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை, மிளகு தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் நேரம் ஊற வெச்சுட்டு, பின்னாடி தோசை கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொரிச்சு எடுங்க. ஒவன் இருந்தா 20 நிமிஷம் வெச்சு கிரில் பன்னிட்டு, அப்பரம் 2 நிமிஷம் தோசை கல்லில் போடலாம். கூட லேசா வேக வெச்ச கேரட், பேன்ஸ், நறுக்கின வெங்காயம், சாலட் கீரை வைத்து பரிமாறனும்.

நான் நேற்று தான் சிக்கன் சமைத்தேன், அதானால இன்னும் 2 நாள்ல செய்து படம் எடுத்து கண்டிப்ப அறுசுவை'க்கு அனுப்பறேன். :)

இது தான் எனக்கு தெரிஞ்ச சிக்கன் சிஸ்லர். வேற யாராது வேர மாதிரி தெரிஞ்சா சொல்லுவாங்க. ஏன்னா சிஸ்லர்'ஙிறது பரிமாறும் போது ஒரு கனமான சூடான தட்டில் வைப்பாங்க. சூடான அதன் மேல லேசா தண்ணீர் தெளிச்சதும் ஒரு மனம் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்