மசாலா வடை

தேதி: November 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

1. துவரம் பருப்பு (அ) கடலை பருப்பு (அ) இரண்டும் கலந்து - 1 கப்
2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
3. மிளகாய் வற்றல் - 5
4. கருவேப்பிலை - 1 பிடி (பொடியாக நறுக்கியது)
5. உப்பு


 

பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து லேசாக கொரகொரப்பாக அரைக்கவும். (ரொம்ப கொரகொரப்பா இருந்தா வடை தட்டினா விட்டு போகும்)
இத்துடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து சின்ன சின்ன வடை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிரமாக பொரித்து எடுக்கவும்.


விரும்பினால் இத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்க்கலாம். வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் அனைத்திற்கும் ஏற்றது. மாலை நேர மழையில், டீ'யுடன் இந்த வடை.... ம்ம்ம்.... சூப்பர்.

மேலும் சில குறிப்புகள்