Daily microwaveoven tips

Daily microwaveoven செய்யும் உணவை பற்றி சில tips கொடுத்தால் புதிதாக பயன்படுத்துபவருக்கு useful இருக்கும்.please

அன்பு தோழிகளே
Daily microwaveoven செய்யும் உணவை பற்றி சில tips கொடுத்தால் புதிதாக பயன்படுத்துபவருக்கு useful இருக்கும்.please

அன்பு தோழிகளே,

மைக்ரோவேவில் காய்கறிகள் வேகவைக்கும் போது முதலில் உப்பு சேர்க்காமல் வேக வைக்கவேண்டும்.

மைக்ரோவேவில் எது சமைப்பதாக இருந்தாலும் கடைசியில்தான் உப்பு சேர்க்கவேண்டும்.சாதாரனமான சமையலில் சேர்ப்பதை விட குறைவாகவே பிடிக்கும்.

மைக்ரோவேவ் சுத்தம் செய்ய அதற்கென்று டிஷ்யூ கிடைக்கிறது.அதை கொண்டு சுத்தம் செய்யலம்.கிடைக்காதவர்கள் ஒரு மைக்ரோ வேவ் கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து எலுமிச்சை ஜூஸ் கலந்து மைக்ரோஹையில் 7 முதல் 10நிமிடம் வைத்து பின்னர் சுத்தமான துணியால் துடைத்தால் சுத்தமாகிவிடும்.உணவு வாடைகளும் போய்விடும்.

சப்பாத்தி ரிஹீட் செய்யும் போது முதலில் ஒரு கப் தண்ணிர் வைத்து சூடாக்கி விட்டு பின்னர் சப்பாத்தி வைத்து சூடாக்கினால் சப்பாத்தி காய்ந்து போகாமல் மிருதுவாகவே இருக்கும்.

எந்த உணவானாலும் மைக்ரோவேவில் இருந்து எடுத்தவுடன் சாப்பிட வேண்டாம்.1நிமிடம் கழித்து சாப்பிடுவதே நல்லது.

பால் தண்ணீர் போன்றவறை சூடாக்கி எடுத்ததும் அதில் சர்க்கரை போடும் போதும் அல்லது ஸ்பூன் கொண்டு கலக்கும் போதும் கவனம் தேவை.ஒருவேளை அதிகம் சூடாகியிருந்தால் பொங்கி தெறிக்கும்.

மைக்ரோவேவில் ஒருபோதும் முழு முட்டையை வேக வைக்கக் கூடாது. முட்டையை உடைத்து பின் வேக வைப்பதாக இருந்தாலும் மஞ்சள் கருவை ஃபோர்க்கால் குத்தி உடைத்த பின்னரே வைக்க வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மைக்ரோவேவில் அப்பளம் எண்ணை இல்லாமல் பொரிக்கலாம். சுட்ட அப்பளம் சுவை இருக்கும். பிடிக்காதவர்கள் அப்பளம் மேல் சிறிது எண்ணை தடவி மைக்ரோவேவில் பொரிக்கலாம்.

ஹலோ ஃப்fரென்ட்ஸ் எனக்கும் ஒரு சந்தேகம்.ப்ளீஸ் சொல்லுங்க.மைக்ரோஓவனில் பாஸ்மதி ரைஸுக்கு எவ்வளவு தண்ணீர் வைக்கணும்.சாதாரனமாக புழுங்கல் அரிசிக்கு 1 ஆழாக்கு அரிcஇக்கு 3 ஆழாக்கு தண்ணீர் வைக்கிரேன்.கரெக்ட்டாக இருக்கும்.ஆனால் நான் இதுவரை பாஸ்மதி ரைஸ் ஓவனில் வைத்ததில்லை.

ஹாய் தனு,எப்படி இருக்கிங்க?பாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.

ramba

ஹாய் தனு,எப்படி இருக்கிங்க?பாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.

ramba

ஹாய் தனு,எப்படி இருக்கிங்க?பாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.

ramba

நன்றி, நன்றி, நன்றி கவிசிவா, ஸ்ரீதேவி,தனு, ரம்பா

அன்பு தோழிகளே,

ஹா ரம்பா ரொம்ப தேங்க்ஸ்.எனக்காக 1 முறைக்கு 3 முறை சொல்லியிருக்கீங்க.நான் நைட்டிர்கே ட்ரை பன்னரேன்.தேங்க்ஸ்.உங்க பெயர் கரெக்ட்டா.

கிழங்கு, கத்தரிக்காய் வேகவைக்கும் போதும் முட்டைக்குச் செய்வதைப் போன்று முட்கரண்டியால் குத்தி/கத்தியால் கீறிவிட்டு வேகவைக்கவேண்டும்.
கிழங்கு துண்டுகளாக்கி வைப்பதை விட முழுதாக தோலுடன் வைப்பதுதான் நல்லது. சீராக வெந்திருக்கும்.
உப்புச் சேர்த்துச் சமைப்பது துருப்பிடித்தலை ஊக்குவிக்கும். அவசியமாகிறபோது, மூடிவைத்துச் சூடாக்குவது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்