அவல் உப்புமா

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு: 2-3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - இரண்டு கோப்பை
பச்சைமிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - அரைக்கோப்பை (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - அரை அங்குலத்துண்டு (மெல்லியதாக நறுக்கியது)
தேங்காய்ப்பூ - அரைக்கோப்பை
கொத்தமல்லி - கால்க்கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு, சீரகம் சேர்த்து - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி(அ)வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைசாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேச்சைகரண்டி
மஞ்சள் தூள் - சிறிது


 

அவலை சுத்தம் செய்து நீரில் இரண்டு அல்லது மூன்று நிமிடம் ஊறவைத்து சொட்ட பிழிந்து வைக்கவும்.
கடலைப்பருப்பையும், உளுந்தையும் நீரில் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு வெடித்ததும் ஊறிய பருப்புகளைப் போட்டு அவைகள் சிவந்ததும் கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பச்சைமிளகாயைப் போட்டு சிறிது வதக்கிவிட்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயதூளையும் சேர்க்கவும்.
பிறகு அதில் வெங்காயம் கொத்தமல்லியைப் போட்டு வதக்கி, வெங்காயம் சிறிது வெந்தவுடன் உப்பைப் போட்டு அவலைக் கொட்டி, நன்கு அவல் சூடாகும் வரை கிளறி விடவும்.
கடைசியாக எலுமிச்சைசாற்றை தெளித்து தேங்காய்ப்பூவைப் போட்டு கிளறிவிட்டு உடனே பரிமாறவும், சுவையான சிற்றுண்டி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அவல் செய்தேன். நன்றாக இருந்தது. தேங்காய் மற்றும் இஞ்சி சேர்க்கவில்லை. ஆனாலும் சுவையாக இருந்தது.

ஹலோ கவின் எப்படி இருக்கீங்க? இந்த அவல் குறிப்பு செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி.தேங்காய் இஞ்சி சேர்காமல் சுவையாய் செய்து இருப்பது மகிழ்ச்சியே மீண்டும் நன்றி.

மனோகரி அக்கா, அவல் உப்புமா செய்தேன் சுவையாக
இருந்தது.அவலை வெல்லம் சேர்த்து இனிப்பாக செய்துதான் இதுவரை சாப்பிட்டேன்.இன்று தான் முதல் முறை காரமாக செய்தேன்,வித்தியாசமான சுவை நன்றாக இருந்தது.உங்களுக்கு எனது நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்பு சகோதரி மனோகரி அவர்களுக்கு,

காலை உணவுக்கு அவல் உப்புமா செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நன்றிகள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126